Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சதாசிவம் கிருஸ்ணகுமார் என்னும் இயற்பெயரை கொண்ட கேணல் கிட்டு அவர்கள் 02.01.1960 ஆம் ஆண்டு பிறந்தார். 1983 ஆம் ஆண்டு இறுதிக் காலத்தில் இந்தியாவவுக்குப் பயிற்சிக்கு எனச் சென்ற தமிழீழ விடுதலைப் புலிகளின் முதற்குழுவில் கேணல் கிட்டு அவர்கள் இடம்பெற்றார். பயிற்சியை முடித்து தமிழீழம் வந்த கேணல் கிட்டு 02.03.1984 ஆம் ஆண்டு நடைபெற்ற குருநகர் இராணுவமுகாம் தாக்குதல் உட்பட பல்வேறு தாக்குதல்களில் முக்கிய பங்கு வகித்து நெறிப்படுத்தினார்.

இதேநேரம் யாழ் மாவட்டத் தளபதியாக இருந்த கப்டன் பண்டிதர் 09.01.1985 ஆம்  ஆண்டு வீரமரணமடைய அவரின் இடத்திற்கு கேணல் கிட்டு அவர்கள் நியமிக்கப்பட்டார். யாழ் மாவட்டத் தளபதியானவுடன் யாழ். காவல்த்துறை நிலையத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்று நடாத்தி, அங்கிருந்த பெருந்தொகையான ஆயூதங்களைக் கைப்பற்றினார். பங்குனி மாதம் 1987 ஆம் ஆண்டு இறுதியில் மேற்கொண்ட கைக்குண்டுத் தாக்குதலில் தனது இடதுகாலை இழந்தார். யாழ் மண்ணை முற்றிலும் மீட்டெடுத்து யாழ்மாவட்ட தளபதியாகவும் சிறந்த படகோட்டியாகவும் மற்றும் பல்முக ஆற்றலுடையவராகவும் திகழ்ந்தார். தமிழீழ விடுதலைப் புலிகளின் ஊடக வளர்ச்சிக்கு கேணல் கிட்டு அவர்கள் ஆற்றிய பங்களிப்பு அளப்பெரியது. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு இலங்கை இந்திய அரசுகளுடன் இடம்பெற்ற பேச்சு வார்த்தைகளிலும் பங்காற்றி செயற்ப்பட்டார்.
 
1989 இல் இலங்கை அரசுடன் பேசுவதற்கு கொழும்பு சென்ற குழுவில் அங்கம் வகித்த கேணல் கிட்டு விடுதலைப் புலிகளின் வெளிநாட்டுப் பிரிவுப் பொறுப்பாளராக அங்கிருந்தபடியே லண்டன் சென்றார். பின்னர் லெப். கேணல் குட்டிசிறி, மேஜர் வேலன், கப்டன் குணசீலன், கப்டன் றௌஷான், கப்டன் ஜீவா, கப்டன் நாயகன், லெப். அமுதன், லெப். தூயவன், லெப் நல்லவன் உட்பட 10 பேருடன் 'குவேக்கர்ஸ்' இன் சமாதானச் செய்தியுடன் சர்வதேச கடற்பரப்பினூடாக எம்.வி அகத் என்ற கப்பலில் தமிழீழம் திரும்புகையில் 16.01.1993 ஆம் ஆண்டு இந்தியக் கடற்படையால் சுற்றி வளைக்கப்பட்ட போது கப்பலை வெடிக்க வைத்து வீரமரணமடைந்து தமிழ் வீரம் காத்தார்.
 
கேணல் கிட்டு அவர்கள் உட்பட 10 வீரவேங்கைகளினதும், ஆயிரமாயிரம் மாவீரர்களின் மற்றும் தமிழீழ மக்களின் கனவினை நனவாக்க தமிழ் இளையோர்களின் பங்களிப்பு இன்றைய காலகட்டத்தில் இன்றியமையாத ஒன்றாகும். முள்ளிவாய்க்கால் அவலத்தின் பின்னரும் தமிழருக்கெதிரான இனப்படுகொலை பல்வேறு வடிவங்களில் சிறிலங்கா அரசு முன்னெடுத்து வருகின்றது. சுயநிர்ணய உரிமை கொண்ட தனித் தமிழீழம் தான் தமிழரின் தீர்வாக அமையும் என்பதை சர்வதேசத்திற்கு எடுத்து கூறும் பொறுப்பு தாயகக் குரல்கள் நசுக்கப்பட்ட நிலையில் புலம்பெயர் இளையோரிடமே உள்ளது.
 
 தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்
 
நன்றி
 தமிழ் இளையோர் அமைப்பு - யேர்மனி
ஊடகப்பிரிவு

0 Responses to கேணல் கிட்டு மற்றும் அவருடன் வீரமரணமடைந்த மாவீரர்களின் 20ம் ஆண்டு நினைவு நாள்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com