Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”


புனித இஸ்லாமிய மார்க்கம் பரவிய சவுதி அரபிய நாட்டிலே யாராலும் சகிக்க முடியாத சம்பவம் என்றால் இந்த இலங்கையைச் சேர்ந்த ரிஸானாவின் மரண தண்டனைதான். இரக்கமற்ற மனிதர்கள் அந்நாட்டில் இருக்கிறார்கள் என்பதனை இது உறுதிபடுத்துகின்றது. 
இனிமேலும் இலங்கை, இந்தியா மற்றும் ஏனைய நாடுகளிலிருந்து பெண்கள் வீட்டு வேலைகளுக்கு போகத்தான் வேண்டுமா? அவர்களை அனுப்பும் கணவன்மார்களும், தந்தைமார்களும் முதுகெலும் அற்றவர்களா?
ஆண் என்றால் உழைத்து தனது குடும்பத்தை காப்பாற்ற வேண்டும். அதனைவிட்டுவிட்டு பெண்களை இப்படி அடிமையாக்கி அதில் வரக்ககூடிய பணத்தில் உணவை உண்பது என்பது ஒரு ஆண்மைக்கும் அழகும் அல்ல ஒரு மனிதனுக்கும் அழகும் அல்ல. இனிமேலும் உங்கள் பெண்களை நீங்கள் பார்த்துக் கொள்ளங்கள்.
இலங்கை அரசசிடம் ஒரு அன்பான வேண்டுகாள்!
இரக்கமற்ற அந்த சவுதி நாட்டு மனிதர்களுக்கும் ஏனைய நாட்டு மக்களுக்கும் நாயாய் உழைப்பதைவிட நம்நாட்டில் வாழும் கஷ்டமான குடும்பங்களுக்கு வேலைவாய்ப்புக்களை வழங்கி அவர்களுடைய பிரார்த்தனையை பெற்றுக் கொள்ளுங்கள். இதுதான் நீங்கள் செய்யும் மனித நேயமாக இருக்கும்.
நீங்கள் எந்த அரசியல் தலைவராக இருந்தாலும் ஒரு நாளைக்கு மரணத்தை சந்தித்தே ஆக வேண்டும். உங்கள் மரணம் அனைத்து மக்களின் மனதிலும் நிலையாக வேண்டும். உங்களை நம்பியிருக்கும் மக்களுக்கு பிரயோசனம் தரக்கூடிய அமைப்பில், தொழில் வாய்ப்புக்களை வழங்குங்கள்.
நமது பெண்களை எந்த நாடுகளுக்கு அனுப்ப வேண்டிய அவசியமில்லை. நமது பெண்களை காப்பாற்ற வேண்டியது நமது பொறுப்பு.
எனவே இலங்கை அரசே!
இது உங்களுக்கான அடுத்த ஒரு செயல்திட்டம்!
உங்கள் பணி இனிதே தொடரட்டும்!…
அனைத்தும் அறிந்தவன் அள்ளாஹ் ஒருவனே! அவனே நியாயத்தீர்ப்பின் அதிபதியாவான்.
நன்றி: இர்பான், வசந்தம் டீவி,

0 Responses to ரிஸானா நபீக் குழந்தையை கொன்றார்களா? இல்லை அது ஒரு விபத்தா? (காணொளி இணைப்பு)

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com