Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கடந்த நவம்பர் 20 ஆம் திகதி சீனாவில் தொடங்கிய கடும் குளிரும் பனிப் பொழிவும் இன்னமும் ஓயவில்லை.
 கடந்த மூன்று தசாப்தங்களில், நேற்று சனிக்கிழமையே சீனாவில் அதிக குளிர் நிலவிய நாளாக பதிவாகியுள்ளது.

இது குறித்து சீனாவின் காலநிலை அவதான நிலையமான CMA தகவல் தருகையில் இக்குளிர் காலத்தில் சில தினங்களில் அதிக பட்சமாக மைனஸ் - 15.3 டிகிரிக்கு வெப்ப நிலை வீழ்ச்சியடைந்திருந்ததாகத் தெரிவித்துள்ளது. பீஜிங்கில் வெப்பநிலை பல வாரங்களாக 0 டிகிரியைத் தாண்டவேயில்லை. சில தினங்களில் வெப்ப நிலை மைனஸ் -18 டிகிரியையும் தொட்டுள்ளது. உறைய வைக்கும் இக்குளிர் காரணமாக பாதைகளில் பனி கட்டியாகி அகற்றுவதற்குக் கடும் சிரமமாக உள்ளதால் போக்குவரத்து பெரும்பாலும் பாதிக்கப் பட்டுள்ளது.

இதேவேளை இக்குளிர் சீனாவின் கிழக்குக் கடற்கரைப் பகுதியில் தண்ணீரைப் பெருமளவு உறைய வைத்ததால் 1000 இற்கும் மேற்பட்ட கப்பல்கள் நடுவில் சிக்கியுள்ளன. மேலும் ஷடொங் மாகாணத்தில் உள்ள லைஷௌ வளைகுடாவில் உள்ள கடலும் உறைந்து போயிருப்பதால் அங்கும் 1000 கப்பல்கள் நகர முடியாமல் மாட்டிக் கொண்டுள்ளன என சீனா டெய்லி பத்திரிகை தெரிவித்துள்ளது. இப்பகுதியில் 291 சதுர கிலோ மீட்டர் பரப்பளவுக்கு கடல் உறைந்து கட்டியாகியுள்ளது எனக் கூறப்படுகின்றது.

சீனாவில் பனி பெய்து வரும் பல பாகங்களிலும் பேரூந்து மற்றும் ரயில் வகை தரை வழிப் போக்குவரத்து பாதிப்பு அடைந்துள்ளது. விமானப் போக்குவரத்தும் சிறிது ஸ்தம்பிதம் அடைந்துள்ளது. நீர் மின் உற்பத்தியும் தடைப்பட்டுள்ளது. இந்நிலையில் தென் சீனாவில் இரவில் பனிப் புயல் வீசுவதால் கடும் குளிர் நிலவுவதாகவும் இதனால் ஏழைகளும் நடுத்தர வயது மக்களும் கடும் அவதிப் பட்டு வருவதாகவும் கூறப்படுகின்றது.

0 Responses to 3 தசாப்தங்களில் இல்லாதளவு சீனாவை வாட்டும் கடும் குளிர்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com