147 rue la Fayette, 75010 Paris இல் அமைந்துள்ள குர்திஸ்தான் தகவல்
மையத்தின் (centre d'information du Kurdistan) உள்ளே புதன் கிழமை
நள்ளிரவிற்குப் பின்னர் வியாழக்கிழமை அதி காலைக்கு முதல் மூன்று பெண்கள்
சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இத் தகவல் மையம் GARE DU NORD தொடருந்து
நிலையத்திற்கு முன்னால் உள்ள வீதியிலேயே அமைந்துள்ளது.

குர்திஸ்தான் கலாச்சாரக் கல்லூரியின் செய்றபாட்டாளர் ஒருவர் அதிகலை இரண்டு மணிக்குத் தகவல் மையம் நோக்கிச் சென்ற போதே இக்கொலை நடந்துள்ளதை அறிந்துள்ளார். நிலத்தில் மூன்று ரவைகளின் வெற்றுக்கூடுகள் கிடந்துள்ளன. அந்த இடம் படுகொலை ஒன்று நடந்தேறி உள்ளதைச் சுட்டிக் காட்டியுள்ளது என AFP தெரிவித்தள்ளது.
தனது நேர அட்டவணையை மாற்றிக் கொண்டு உடனடியாக இன்று வியாழக்கிழமை காலை 9 மணிக்கு பிரான்ஸ் உள்துறை அமைச்சர் மனுவல் வால்ஸ் சம்பவ இடத்திற்கு வந்தள்ளார். "இந்தப் பெண்கள் படுகொலை செய்யப் பட்டுள்ளார்கள். இது பொறுத்துக் கொள்ள முடியாத மாபெரும் தவறாகும்." எனக் கூறினார். கட்டத்திற்குள் சென்ற உள்துறை அமைச்சர் "நாம் எமது இரங்கலை இங்கு தெரிவித்துக் கொள்கின்றோம். பிரான்ஸ் அரசாங்கம் இந்தக் கொலையின் குற்றவாளிகளை வெளிச்சத்திற்குக் கொண்டு வரும் என்று உறுதியளிக்கின்றேன்" என்றும் கூறியுள்ளார்.
அவ்விடத்தில் பெருந்திரளான குர்திஸ்தான் மக்கள் பெரும் அதிர்ச்சியுடனும் ஆத்திரத்துடனும் குழுமியிருந்தனர். கட்டுப்படுத்த முயன்ற காவற்துறையினரையும் மீறி "நாம் அனவரும் PKK (குர்திஸ்தான் தொழிலாளர் கட்சி)" என்றும் "துருக்கி கொலையாளிகள்" என்றும் கூச்சலிட்டனர்.

கொல்லப்பட்ட மூன்று பெண்களில் 32 வயதுடைய Fidan Dogan நிரந்தரமாக அந்தத் தகவல் மையத்தில் பணி புரிபவர் எனக் குர்திஸ்தான் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவரும் இத் தகவல் மையத்தித்தின் பொறுப்பாளருமான Leon Edart கூறினார். மேலும் Fidan Dogan பிரான்சிற்கான குர்திஸ்தான் தேசியக் கொங்கிரஸின் (Congrès national du Kurdistan) பொறுப்பாளருமாவார்.

கொல்லப்பட்ட மற்றைய பெண்ணான Sakine Cansiz குர்திஸ்தான் தொழிலாளர் கட்சியான PKK வினை உருவாக்கியவர்களில் ஒருவர் ஆவார்.
PKK என்பது குர்திஸ்தான் தொழிலாளர்கள் கட்சி ஆகும். இது Abdullah Öcalan இனால் இது 1978 இல் உருவாக்கப்ட்டது. பின்னர் இது 1981 இல் மக்கள் விடுதலை இராணுவமாக மாறித் துருக்கி அரசாங்கத்தின் மீது கரந்தடிப் போரை நடத்தினார்கள். PKK ஜரோப்பிய ஒன்றியத்தினால் பயங்கரவாத இயக்கமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் இப்போது அங்காராவுடன் அமைதிப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
மூன்றாவது பெண்ணான Leyla Soylemez ஒரு இளம் போராளியாவார்.

Leon Edart இன் தகவலின் படி கொலை செய்ய வந்தவர்களை தம்மிடம் அலுவலாக வந்தவர்கள் என்று எண்ணியே இவர்கள் கொலையாளிகளுக்குக் கதவைத் திறந்து உள்ளே விட்டிருக் வேண்டும். புதன் கிழமை மதியத்தின் பின்னர் இவர்கள் அங்கு தனியாகவே இருந்துள்ளனர்.
முதலாம் மாடியிலிருக்கும் இந்த அலுவலகத்தின் கதவுகள் இரத்திரனியல் இலக்கங்களால் (digicode) பாதுகாக்கப்பட்டுள்ளது. மேலும் அழைப்பு மணி அழுத்தி மேலிருந்து திறந்தால் மட்டுமே யாரும் உட்செல்ல முடியும். புதன் கிழமை மாலை சங்க உறுப்பினர் ஒருவர் பலமுறை மணியழுத்தித் தொடர்பு கொண்டும் யாரும் உள்ளிருந்து பதிலளிக்கவில்லை. அவரிடம் திறப்பு இல்லாமையினால் அவரால் உட்செல்ல முடிந்திருக்கவில்லை. ஆகவே இவர்களிடம் தெரிந்த அல்லது அவர்கள் கதவு திறந்தே கொலையாளி உள்ளே சென்றிருக்க வேண்டும் எனக் கூறப்பட்டது. கொல்லப்பட்ட இரு பெண்கள் கழுத்தில் சுடப்பட்டுள்ளனர்.
மூன்றாவது பெண்ணிற்கு வயிற்றிலும் நெற்றியிலும் சூட்டுக் காயங்கள் காணப்பட்டுள்ளது. பிரான்ஸ் குர்திஸ்தான் சங்கங்களின் கூட்டமைப்பின் தகவலின் படி கொலையாளிகள் ஓசையடக்கி பொருத்தப்பட்ட துப்பாக்கியினாலேயே இவர்களைக் கொலை செய்திருக்கிறார்கள் எனத் தெரியவருகின்றது. இவர்கள் கருத்தின் படி இவர்கள் புதன்கிழமை 15h00 மணியளவிலேயே கொல்லப்பட்டிருக்க வேண்டும் எனக் காவற்துறையினரிடம் தெரிவித்துள்ளனர்.
பிரான்ஸ் ஜனாதிபதி பிரான்சுவா ஒல்லோந்த் Gironde இலுள்ள Latresne விமானப் பயிற்சிக் கல்லூரிக்குச் சென்றிருந்த வேளையில் இப் படுகொலைகளைக் கேள்வியுற்று "இந்த மூன்று பெண்களின் படுகொலைகள் மிகக் கொடூரமானவை. இந்தப் பெண்களிகளில் ஒருவரை நானும் பல அரசியல் பிரமுகர்களும் மிக நன்கு அறிவோம். அவர் எங்களை வந்து பலமுறை சந்தித்துள்ளார்." என்று அரச அதிபர் கூறியுள்ளார். பரிசின் அரச நீதித்துறை இவ்வழக்கை பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரிடம் கையளித்துள்ளது. இவ்விசாரணை பரிசின் குற்றத் தடுப்பப் பிரிவின் பயங்கரவாதத் தடுப்புத் துணைச் செயலகத்திடமும் ( sous-direction antiterroriste (Sdat) பயங்கரவாத் தடுப்புப் பிரிவினரிடமும் (section antiterroriste (SAT) கையளிக்கப்பட்டுள்ளது.

குர்திஸ் இன மக்கள் பிரான்சின் அனைத்துப் பகுதிகளிலுமாகக் கிட்டத்தட்ட ஒரு இலட்சத்து ஐம்பதினாயிரம் பேர் வாழ்கின்றனர். மிக நெருக்கமாக Île-de-France, Alsace( Lorraine), les Bouches-du-Rhône ஆகிய பகுதிகளில் வாழ்கின்றனர். பரிசிலுள்ள குர்திஸ்தான கல்வி மையத்தின் ஆய்வாளர் Rusen Werdi இன் புள்ளி விபரப்படி இங்கு வாழும் குர்திஸ் இன மக்களில் 90 வீதமானோர் துருக்கியைச் சேர்ந்தவர்கள். அத்தோடு 6500 ஈரானியக் குர்திஸ் மக்களும் 4800 ஈராக்கியக் குர்திஸ் மக்களும் மிகுதி சிரியா, லெபனான் மற்றும் முன்னாள் கோகசஸ் ரஸ்யக் குடியரசின் குர்திஸ் மக்களுமாவார்கள். 1965 இல் துருக்கிக்கும் பிரான்சிற்குமான இருதரப்பு ஒப்பந்தை அடுத்து முதலாவது குர்திஸ் இன மக்களின் குடியேற்றம் பிரான்சில் நிகழ்ந்தது.
அதன் பின்னர் 1981 இல் இடதுசாரிக் கட்சியின் ஆட்சி பிரான்சில் வந்ததன் பின்னர் இவர்களுக்கான கதவு பிரான்சில் பலமாகத் திறக்கப்பட்டது. அதன் பின்ரே பெருமளவான குடியேற்றம் நிகழ்ந்தது. பிரான்சில் நிகழும் படுகொலைகள் பல வெளிச்சத்திற்கு வருவது போல் தோன்றினாலும் சில நாடகளின் பின்னர் இராஜதந்திர அழுத்தங்களாலும் பூகோள அரசியல் வியபார நலன்களினாலும் மீண்டும் இருளுக்குள்ளேயே சென்று விடுகின்றன. இந்தப் படுகொலைகளாவது வெளிச்த்திற்கு வரட்டும். ஆனாலும் வழமை போல இக்கொலைகளுக்கும் உள்விரோதம் காரணம் எனச் செய்திகளைப் பரப்பத் தவறவில்லை.

0 Responses to பரிசில் நடந்தேறிய அரசியல் படுகொலைகள் - குர்திஸ் மக்களின் அஞ்சலிகள்! (படங்கள் இணைப்பு)