Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”


நான் விடுதலைப் புலியென்று கூறினால் ஒரு தடவையேனும் விசாரணை மேற்கொள்ளவில்லையே. அவ்வாறு துணிவு இருந்தால் என்னிடம் வந்து பொலிஸார் விசாரணையை மேற்கொள்ளலாம் என்று புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரத்ன தெரிவித்தார்.

கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டின் போது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே விக்கிரமபாகு கருணாரத்ன இதனைத் தெரிவித்தார்.
அவர் தொடர்கையில்,

நான் விடுதலைப்புலியா? நான் பிரபாகரனுடன் ஒன்றாகவா கைகோர்த்துக்கொண்டு திரிந்தேன். அவ்வாறு நான் விடுதலைப் புலியென்று கூறினால் ஒரு தடவையேனும் விசாரணை மேற்கொள்ளவில்லையே.

அவ்வாறு துணிவு இருந்தால் என்னிடம் வந்து பொலிஸார் விசாரணையை மேற்கொள்ளலாம்.

அரசாங்கம் என்னை புலியென்று கூறுகின்றது. நான் பிரபாகரனோடு கைகோர்த்துக்கொண்டு ஒன்றாகவா அலைந்து திரிந்தேன்.

அவ்வாறு நான் விடுதலைப் புலியென்றால் இதுவரை ஒருநாள் கூட என்னை விசாரணைக்குட்படுத்தவில்லை. என்னை விசாரிக்க வரும் பொலிஸாரையும் பார்க்கத்தான் போகின்றேன்.

நாட்டின் பல இடங்களில் விடுதலைப் புலிகளினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களுக்கு காரணமாக இருந்த சிலர் இன்று அரசாங்கத்தில் இராஜபோக வாழ்க்கை நடத்துகின்றனர்.

இதனை விடுத்து என்னை விடுதலைப் புலி என்று கூறவது வேடிக்கையானது என்றார் விக்கிரமபாகு.

0 Responses to நான் விடுதலைப்புலி என்றால் என்னிடம் விசாரணை மேற்கொள்ளலாம்! விக்கிரமபாகு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com