Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பாலியல் குற்றங்களில் ஈடுபட்ட எம்.பி, எம்.எல்.ஏக்களின் பதவியைப் பறிக்க வேண்டும் என்று தொடரப்பட்ட பொது நல வழக்கின் மீதான விசாரணையை உச்ச நீதிமன்றம் இன்று தொடக்கி உள்ளது.

கடந்த 16 ஆம் திகதி ஓடும் பேருந்தில் டெல்லி மருத்துவக் கல்லூரி மாணவி ஒருவர் 6 பேர் கொண்ட கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்டு, சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். அப்போது, பல தரப்பு மக்களும் கொந்தளித்து, டெல்லி மாணவிக்கு நீதி கேட்டு போராட்டம் நடத்தினர். மேலும் பெண்கள் மீதான பாலியல் வன்முறைக்கு எதிரான குரல்களும் ஓங்கி ஒலிக்க ஆரம்பித்தது.

இதன் அடிப்படையில் பாலியல் பலாத்காரக் குற்றம் புரிந்த எம்.பி, எம்.எல்.ஏக்களின் பதவியையும் பறிக்க வேண்டும் என்று டெல்லி உச்ச நீதிமன்றத்தில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் இரு பொது நல வழக்கு தொடரப்பட்டது. அந்த மனுவின் மீதான விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில், நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, மற்றும் ராதாகிருஷ்ணன் இவர்கள் முன்னிலையில் இன்று  வந்தது.

அந்த மனுவில், 'பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபட்ட எம்.பி, எம்.எல்.ஏ க்களின் பதவியைப் பறித்து அவர்களை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் குறித்த வழக்குகளை பெண் போலீசார்களே விசாரிக்க மத்திய அரசுக்கு உத்தரவிடே வேண்டும்' என்றும் கூறப்பட்டிருந்தது

மேலும் பெண்களின் பாதுகாப்புக்காக இது போன்ற வழக்குகளை பெண் நீதிபதிகளே விசாரிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டிருந்ததாகத் தெரிகிறது. மனுவை விசாரித்த நீதிபதிகள், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபட்ட எம்.பி, எம்.எல்.ஏ க்கள் மீதான குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்தவுடன் விரைவு நீதிமன்றத்தில் வழக்கை விசாரித்து, விரைவில் தீர்ப்பு வழங்கத்தான் எங்களுக்கு அதிகாரம் உள்ளது. இவர்களின் பதவி நீக்கத்தை மத்திய அரசுக்கு பரிந்துரைக்கும் அதிகாரம் உச்ச நீதிமன்றத்துக்கு இல்லை என்று  கூறியுள்ளனர்.  மேலும் மனுதாரர் மனுவில் கேட்டுக் கொண்டுள்ளமைக்கு விரைவில் பதில் தரப்படும் என்றும் கூறியுள்ளனர்.

0 Responses to பாலியல் குற்றங்களில் ஈடுபட்ட எம்.பி, எம்.எல்.ஏக்களின் பதவியைப் பறிக்கப்படுமா?

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com