இந்திய - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில், மூன்றாவதும், இறுதியுமான ஒரு
நாள் போட்டி நாளை ஜனவரி 6 ம் திகதி நடக்கிறது. டெல்லியில் நிலவும் குளிர்,
புகார் மூட்டம் போட்டியை பாதிக்கும் என கருதப்படுகிறது.
இந்திய அணி தொடர்ந்து இரண்டு, ஒரு நாள் போட்டிகளிலும் தோல்வியை தழுவியதால் நாளைய போட்டிக்குரிய அணி வீரர்களில் மாற்றம் கொண்டுவரப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது.
ஷேவாக் அல்லது கம்பீருக்கு பதில் ராஹேன் இணைத்து கொள்ளப்படலாம். சிலவேளைகளில் ஷேவாக்கிற்கு நாளைய போட்டியில் ஒரு வாய்ப்பு கொடுக்கப்பட்டு அவர் ஃபோர்முக்கு திரும்பாவிடின் இங்கிலாந்துடனான ஒருநாள் போட்டி தொடரிலிருந்து நீக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
1983-1984ம் ஆண்டு உலக கோப்பைக்கு பிறகான மேற்கிந்திய தீவுகளுடனான போட்டியில் இந்தியா சொந்த மண்ணில் வைட்வாஷ் ஆகியிருந்தது. நாளைய போட்டியில்
தோற்றால் இரண்டாவது தடவையாக சொந்த மண்ணில் வைட் வாஷ் ஆகும்.
கடந்த 10 வருடங்களில் ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் இரு அணிகள் மாத்திரமே இந்தியாவை சொந்த மண்ணில் தோற்கடித்துள்ளன.
நியூசிலாந்து மோசமான இன்னிங்ஸ் தோல்வி
தென் ஆபிரிக்கா நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் கேப்டவுனில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி இன்னிங்ஸாலும் 27 ஓட்டங்களாலும் மோசமான தோல்வியை தழுவியது.
இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 45 ஓட்டங்களை மாத்திரமே எடுத்தது. ஃபிலேண்டர் 5 விக்கெட்டுக்களையும் மோர்க்கெல் 3 விக்கெட்டுக்களையு ஸ்டைய்ன் 2 விக்கெட்டுக்களையு வீழ்த்தினர்.
பதிலுக்கு களமிறங்கிய தென் ஆபிரிக்க அணி 347 ஓட்டங்களை எடுத்து சகல விக்கெட்டுக்களையும் இழந்தது. பீட்டர்சன் 106 ஓட்டங்களை எடுத்தார். பந்துவீச்சில் போல்ட், மார்டின் தலா 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.
இதையடுத்து இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய நியூசிலாந்து அணி 275 ஓட்டங்களை எடுத்திருந்த போது சகல விக்கெட்டுக்களையும் இழந்தது. இதனால் இன்னிங்ஸாலும் 27 ஓட்டங்களாலும் தோல்வி அடைநதது. புரவுன்னில் 109 ஓட்டங்களையும், மெக்குலம் 51 ஓட்டங்களையும் எடுத்தனர்.
பந்து வீச்சில் ஸ்டெயின் 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார். மிக குறைந்த போட்டிகளில் 300 விக்கெட்டுக்களை வீழ்த்தியவர் எனும் பெருமையை ஸ்டெயின் இப்போட்டியில் பெற்றார். அவர் விளையாடிய 61 டெஸ்ட் போட்டிகளில் 304 விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளார்.
இப்போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் தென் ஆபிரிக்கா 1-0 என முன்னிலையில் உள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான இறுதியும், இரண்டாவதுமான டெஸ்ட் போட்டி ஜனவரி 11ம் திகதி தொடங்குகிறது.
தோல்வி அடையும் அபாயத்தில் இலங்கை
இலங்கை - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் சிட்னியில் நடைபெற்று வரும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெறும் நிலையில் உள்ளது.
இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி தனது முதல் இன்னிங்ஸிற்காக 294 ஓட்டங்களை எடுத்தது. திரிமானே 91 ஓட்டங்களையும் ஜெயவர்த்தன 72 ஓட்டங்களையும் எடுத்தனர்.
பதிலுக்கு களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட்டுக்களை இழந்து 432 ஓட்டங்களை எடுத்த போது ஆட்டத்தை டிக்ளே செய்து கொண்டது. வார்னர் 85 ஓட்டங்களையும், ஹோக் 87 ஓட்டங்களையும், விக்கெட் கீப்பர் வேட் 102 ஓட்டங்களையும் எடுத்தனர்.
பந்து வீச்சில் ரங்கன ஹேரத் 4 விக்கெட்டுக்களை வீழ்த்தினார். பதிலுக்கு களமிறங்கிய இலங்கை அணி மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவின் போது 7 விக்கெட் இழப்புக்கு 225 ஓட்டங்களை எடுத்தது. கருணாரட்ன 85 ஓட்டங்களையும் ஜெயவர்த்தன 60 ஓட்டங்களையும் எடுத்தனர்.
தற்போது இலங்கை அணி 87 ரன்கள் முன்னிலையில் உள்ளது. எனினும் இப்போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெறும் நிலையில் உள்ளது.

0 Responses to சொந்த மண்ணில் இரண்டாவது தடவையாக வைட் வாஷ் ஆகுமா இந்தியா?