அச்சம்பவம் நடந்த பின்னர் முதன்முறையாக நேற்று தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த குறித்த சம்பவத்தின் ஒரே ஒரு நேரடி சாட்சியாளரான அப்பெண்ணின் நண்பர், தாம் பேருந்திலிருந்து தூக்கி வீசப்பட்டு இரத்த காயங்களுடன் தெருவில் அனாதரவாக கிடந்த போது, ஒரு மணி நேரத்திற்கு மேல் வேடிக்கை பார்த்துச்சென்றவர்களே பலர். ஒருவரும் எமக்கு உதவ முன்வரவில்லை. தொலைபேசி அழைப்பின் பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் கூட சட்டரீதியிலான சிக்கல்கள் குறித்தே விவாதித்துக்கொண்டிருந்தனர். அரைமணி நேரத்திற்கு பின்னரே எம்மை பொலிஸ் வாகனத்தில் ஏற்றினர். அருகிலிருந்த தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லாமல், நீண்ட தூரம் பயணித்து சப்தர்ஜங் மருத்துவமனைக்கு கொண்டு சென்று அனுமதித்தனர் என பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார்.
இது குறித்து டெல்லி காவல்துறையினர் பத்திரிகையாளர்களுக்கு இன்று பேட்டியளிக்கையில், சம்பவம் நடந்த அன்று, முதல் தொலைபேசி அழைப்பு கிடைத்த 16 நிமிடங்களுக்குள் சம்பவ இடத்திற்கு விரைந்து விட்டோம். மாணவியை மீட்டு மருத்துவமனையில் சேர்க்க மொத்தம் 33 நிமிடங்களே ஆனது. தாமதம் ஏற்படவில்லை என்பதற்கு ஆதாரங்கள் உள்ளன. எல்லை, சட்டச்சிக்கல்கள் தொடர்பில் மோதல் ஒன்றும் பொலிஸாரிடையே ஏற்படவில்லை.
போலிஸார் மீதான ஒவ்வொரு குற்றச்சாட்டுக்களுக்கும் பதில் கூற இது சரியான நேரமல்ல. வழக்கு விசாரணையில் இருப்பதால் விசாரணை குறித்து எதுவும் பேச விரும்பவில்லை என தெரிவித்துள்ளனர்.
காணொளி இணைப்பு.
பாலியல் வன்முறைக்கு யார் பொறுப்பு?
டெல்லி மாணவியின் ஆண் நண்பர் பேட்டி
0 Responses to டெல்லி மாணவியின் நண்பரின் குற்றச்சாட்டுக்களை மறுக்கிறது டெல்லி காவல்துறை