திருமண விழாவொன்றில் கலந்து கொள்வதற்காக சென்னை வந்த குஜராத் முதல்வர்
நரேந்திர மோடி, சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் பேசுகையில், ஐக்கிய
மக்கள் கூட்டணி ஆட்சியில் மக்கள் அதிருப்தியுடன் வாழ்கிறார்கள் என்றார்.
சென்னை விமான நிலையத்தில் தமிழக பாஜகவினர் அவருக்கு மேள தாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளித்திருந்தனர். அங்கு மோடி மேலும் கருத்து தெரிவிக்கையில் காங்கிரஸ் ஆட்சியின் கொள்கையில் ஏற்பட்டுள்ள மாற்றம் தான் நாட்டின் வளர்ச்சியின்மைக்கு காரணம். வளர்ச்சி இல்லாத நிலை இவ்வாறே தொடர்ந்தால் 5 ஆண்டுகளில் ஆட்சியாளர்களை மக்கள் மாற்றிவிடுவார்கள் என்றார். விமான நிலையத்தில் அளிக்கப்பட்ட வரவேற்பை தொடர்ந்து நுங்கம்பாக்கத்தில் இருக்கும் தாஜ் ஜோட்டலுக்கு சென்ற அவர் பின்னர் திருமண விழாவுக்கு சென்று மீண்டும் குஜராத் திரும்பினார்.
இன்று தமிழக முன்னாள் முதல்வரும், நடிகருமான எம்.ஜி.ஆரின் 96வது பிறந்த தினம் என்பதால், அவரது ரசிகர்களுக்கும், தொண்டர்களுக்கும், டுவிட்டரிலும் வாழ்த்து தெரிவித்திருந்தார் மோடி.
இதேவேளை எம்.ஜி.ஆரின் பிறந்த தினத்தையொட்டி நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில், 7.5 அடி உயரத்தில் 500 கிலோ எடை கொண்ட வெண்கல சிலையை தமிழக முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.

0 Responses to காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் மக்கள் அதிருப்தியுடன் வாழ்கிறார்கள்: சென்னையில் மோடி