இலங்கை பிரதம நீதியரசர் ஷிராணி விவகாரம் தொடர்பில் அரசியல் அமைப்பு
சட்டத்தை மீறத் தீர்மானித்துள்ளதாக இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ச
அறிவித்திருப்பதாக சிங்கள ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.
ஷிராணி பண்டாரநாயக்க மீது விசாரணை நடத்தவோ, நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரவோ, நாடாளுமன்ற தெரிவுக்குழுக்கு அதிகாரம் இல்லை என உயர் நீதிமன்றம் நேற்று அறிவித்தது.
இந்நிலையில், உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்றுக்கொள்ளாது, நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் முடிவுக்கு அமைவாக சென்று நாடாளுமன்றத்தில் விவாதத்தை நடத்தி, பின்னர் தனக்குள்ள பெரும்பான்மை பலத்தை பயன்படுத்தி பிரதம நீதியரசரை பதவியிலிருந்து நீக்க தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி தனது அமைச்சர்களிடையே அறிவித்திருப்பதாக குறித்த ஊடகம் தெரிவிக்கிறது. அலரி மாளிகையில் அமைச்சர்களை சந்தித்த போதே இவ்வாறு தெரிவித்துள்ளது.

0 Responses to ஷிராணியை பதவி நீக்கம் செய்ய வேண்டுமாயின் சட்டத்தை மீறத்தயார்: ராஜபக்ச?