Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

டெல்லியில் கடந்த மாதம் இடம்பெற்ற பாலியல் பலாத்கார சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 6 பேரில் ஐவர் இன்று டெல்லி சாகெத் நீதிமன்றத்தில் நேரடியாக ஆஜர்படுத்தப்பட்டனர்.

 ஆறாவது நபர் 18 வயதுக்குட்பட்டவர் என்பதனால் சிறுவர் நீதி மன்றத்தில் வழக்கு விசாரணைகள் நடைபெறுகின்றன.

நீதிபதி நம்ரிதா அகர்வால் முன்னிலையில் ஏனைய ஐவரும் ஆஜர்படுத்தப்பட்ட போது, விசாரணையை அறிந்து கொள்வதற்காக ஏராளமான மக்கள் நீதிமன்றம் முன்பு திரண்டனர். பத்திரிகையாலர்கள், வழக்கறிஞர்களும் நீதிமன்ற அறைக்குள் நுழைய முற்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுவிட்டது. 30 பேர் மட்டுமே அமரக்கூடிய நீதிமன்ற அறைக்குள் அனைவரையும் அனுமதித்தல், பாதிப்புக்களை ஏற்படுத்தும் என கூறிய நீதிபதி, பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்க மறுத்துவிட்டார். இதையடுத்து வழக்கு விசாரணையை வீடியோவில் பதிவு செய்யும் படியும் உத்தரவிட்டார். முதற்கட்ட விசாரணைகள் முடிந்ததும், அடுத்த கட்ட விசாரணை எதிர்வரும் வியாழக்கிழமை வரவிருக்கிறது.

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட இருவர் மரணதண்டனையிலிருந்து தப்பிப்பதற்காக அரசுக்கு சார்பிலான சாட்சியங்களாக மாற சம்மதம் தெரிவித்துள்ளனர்.

0 Responses to டெல்லி பாலியல் பலாத்கார வழக்கு : குற்றவாளிகள் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com