Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கையில் போர் முடிவுற்ற பின்னரும் தொடரும் மனிதப் படுகொலைகள், ஆட்கடத்தல்கள், மனித உரிமை மீறல்கள் என்பவற்றை மையமாக வைத்து பிரித்தானியப் பாராளுமன்றில் சூடான விவாதம் ஒன்று நடைபெற்றது.

கடந்த பல ஆண்டுகளாக இலங்கைத் தமிழரின் வேதனைகளையும், இழப்புக்களையும் நன்கு அறிந்து அதை தமிழர்கள் சார்பில் பிரித்தானியப் பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பிவரும் சிவோன் மக்டோனால் அவர்களின் கோரிக்கைக்கிணங்க இலங்கை தொடர்பான விவாதம் இன்று இடம்பெற்றது.

விவாதத்தின் ஆரம்பத்தில் இலங்கை அரசு தமிழ் மக்கள் மீது மேற்கொண்ட இன அழிப்பு, ஆட்கடத்தல், போர் முடிந்து மூன்று ஆண்டுகளின் பின்னரும் தொடரும் மனிதப் படுகொலைகள், அடிப்படை வசதிகள் அற்று மக்கள் அனுபவிக்கும் அவல வாழ்வு மற்றும் மனித உரிமை மீறல் சம்பவங்கள் என அடுக்கடுக்காக 30 நிமிடங்கள் தொடர்ச்சியான தனது ஆணித்தரமான வாதங்களை ஆதாரங்களோடு முன்வைத்திருந்தார்.

தொடர்ந்து நடைபெற்ற ஒரு மணி நேர விவாதத்தில்  இலங்கை அரசை கண்டித்து சிவோன் மக்டோனால்டின் கருத்தை ஆதரித்து பல பாராளுமன்ற உறுப்பினர்கள் கருத்துக்களை தெரிவித்திருந்தனர்.  சிலர் மேலும் சில விளக்கம் கேட்டு கேள்விகளை தொடுத்தனர். ஒரு சிலர் மட்டும் இலங்கை அரசிற்கு ஆதரவாக தமது கருத்துக்களை தெரிவித்து சிவோன் கூறுவது பொய் , ஆதாரம் அற்றது என்றும் கூறியிருந்தனர்.

இவை அனைத்திற்கும் அவ்வப்போதே சிவோன் மக்டோனால் அவர்கள் எழுந்து தமது ஆணித்தரமான பதிலை அளித்து அவர்களின் வாயை அடைத்திருந்தார். இந்த விவாதத்தில் பிரித்தானியப் பாராளுமன்ற உறுப்பினர்களான சிவோன் மக்டோனால், பறிக் காடினர், கரத் தோமஸ், ஆகியோர் தமிழர்களுக்கு ஆதரவாகவும், இலங்கையை கண்டித்தும் உரையாற்றியிருந்தனர்.

லீஸ் கொட், சைமன் கியூஸ், ஜெரமி ஹண்ட் ஆகியோர் இலங்கை அரசை குற்றம் சுமத்தாது தமிழர்களுக்கு நீதி தேவை என்பதை வலியுறுத்தியிருந்தனர்.

இந்த விவாதத்தின் போது அதிகளவான தமிழர்கள் கலந்துகொண்டு தமிழர்களுக்காக குரல்கொடுத்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தமது ஆதரவையும், நன்றியையும் தெரிவித்திருந்தனர்.


0 Responses to இலங்கையில் தொடரும் அச்சுறுத்தல்கள்! பிரித்தானியப் பாராளுமன்றில் நடைபெற்ற சூடான விவாதம்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com