ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளார் நாயகத்தின்
அண்மைக்கால அறிக்கைகள் எமக்கு இலங்கையின் விடயத்தில் பல உண்மையான தகவல்களை
ஆதாரங்களுடன் வெளிப்படுத்தியிருக்கின்றன.
ஏறக்குறைய இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் தமிழ் அரசன் எல்லாளனுக்கும் சிங்கள இளவரசன் துட்டகைமுனுவுக்கும் இடையில் நடைபெற்ற யுத்தத்திற்கும், 2009ம் ஆண்டு மே மாதம் நடைபெற்று முடிந்த யுத்தத்திற்குமிடையில் நாம் பாரீய வித்தியாசங்களை காணமுடியாது.
இவ் இரு யுத்தங்களிலும் இலங்கைத் தீவின் தென்பகுதியில் வாழும் சிங்களவர்கள் கள்ளம் கபடமான விதிமுறைகள் மூலமே தமிழர்களை தோற்கடித்தார்கள் என்பது வெளிப்படையாகிறது.
வயதான தமிழ் அரசன் எல்லாளனை, சிங்கள இளவரசனான துட்டகைமுனு, நேரடி யுத்தத்திற்கு அழைத்து, எல்லாளனுடைய யானையை தாக்கி, வயதான எல்லாளன் யானையிலிருந்து கீழே விழும் தறுவாயில், எல்லாளனையும் தாக்கி வெற்றி வாகை சூடியவர் தான் சிங்கள இளவரசன் துட்டகைமுனு.
இதேபோல் 2009ம் ஆண்டு நடைபெற்று முடிந்த யுத்தத்தில் உலகிற்கு பொய்களுக்கு மேல் பொய்கள் கூறியும், அப்பாவி பொது மக்களை கொன்று குவித்தும், வைத்தியசாலைகளையும் நோயாளிகளையும் தாக்கியும் கொன்றும், பொதுமக்களை பட்டினி சாவிலும், நோய்க்கு மருந்தும் இன்றி, சர்வதேச யுத்த வரையறைகள் சட்டங்களை மீறி, யாருடைய சாட்சிகளும் இல்லாது நடாத்தி முடித்ததே இறுதி யுத்தம்.
சர்வதேச நிறுவனப் பிரதிநிதிகள், ஐ. நா. பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள் சகலரையும் யுத்த பிரதேசத்திலிருந்து அப்புறப்படுத்திய பின்னர், தாம் விரும்பியவாறு போக்கிரித்தனமான முறையில் கபடத்தனமாக இறுதி யுத்தத்தை நடாத்தியது ராஜபக்ச அரசு.
மேற்குறிப்பிடப்பட்ட விடயங்களை ஐ. நா. செயலாளர் நாயகத்தின் காரியாலயத்தினால் கடந்த நவம்பர் மாதம் 14ம் திகதி வெளியிடப்பட்ட அறிக்கையில் மிகத் தெளிவாக கூறப்பட்டுள்ளது.
இவ் அறிக்கையின் 33, 34, 36, 41ம் பந்திகளின் பிரகாரம்:
யுத்த சூனியப் பிரதேசமான வன்னியில் வாழ்ந்த பொதுமக்களின் எண்ணிக்கை, படுகொலை செய்யப்பட்டோh,; நோயாளிகளின் எண்ணிக்கை போன்றவற்றை பல மடங்கு குறைத்து இலங்கை அரசு வெளியிட்டதாகவும், இதனால் சர்வதேச நடவடிக்கைகள் மேற்கொள்ள முடியதோர் நிலையை இலங்கை அரசு தோற்றுவித்ததாகவும், இதன் காரணமாக ஐ. நா. பாதுகாப்புச் சபையின் நடவடிக்கைகள் முன்னெடுப்பதற்கு நிரந்தர அங்கத்துவ நாடுகளான சீனா, ரஷ்யாவின் ஒத்துழைப்பு மற்றைய நாடுகளுக்கு கிடைக்கமல் போயுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
வன்னியில் வாழ்ந்த பெருந்தொகையான பொதுமக்கள் இருப்பிட வசதிகள் இன்றி, உணுவு, வைத்திய, மலசலகூட வசதிகள் இன்றி பெரும் இன்னல்களுக்கு ஆளாகக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழீழ விடுதலை புலிகளின் அங்கத்தவர்கள் வெள்ளை கொடியுடன் சென்றவர்களை இராணுவம் சுட்டு கொன்றதாகவும், யுத்தம் முடிந்ததும் ஐ. நா. மனித உரிமை சபையில், மே 26-27ம் திகதிகளில் இலங்கை தமக்கு சார்பான ஒரு போலியான பிரேரணையை மற்றைய அங்கத்துவ நாடுகளுக்கு கபடத்தனமாக உண்மைக்கு புறம்பான விடயங்களை கூறி நிறைவேற்றியதாக கூறுவதுடன், இவ் பிரேரணையில் போர்குற்ற விசாரணை பற்றி எதுவும் கூறப்படவில்லையெனவும் கூறப்பட்டுள்ளது.
இவற்றுடன் இராணுவத்திடம் சரணைடைந்த மக்கள் வதைமுகாங்களில் எந்தவித அடிப்படை வசதிகளும் இன்றி முடக்கப்பட்டதாகவும் ஐ. நா. செயலாளரின் காரியாலாய அறிக்கை கூறுகின்றது.
மேலும் இவ் அறிக்கை கூறுவதாவது,
பல அரச சார்பற்ற நிறுவன ஊழியர்கள் இலங்கையின் அரச படைகளினால் கைது செய்யப்பட்டும், காணமல் போயும், சித்திரவதை செய்யப்பட்டும், படுகொலை செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
இவையாவும் இலங்கை அரசு ஓர் பயங்காரவாத அரசாக காண்பிப்பதற்கு போதுமானவையாகும்.
இவற்றின் அடிப்படையில், இலங்கையின் ராஜபக்ச அரசாங்கமும் அவரது படைகளும் கபடத்தனமாகவே, துட்டகைமுனு தமிழ் அரசன் எல்லாளளை வெற்றி கொண்டதுபோல் வெற்றிவகை சூடினார்கள் என்பது தெளிவாகிறது.
சர்வதேச சட்டங்களை மதிக்காது இவ் அடிப்படையில் யுத்தம் நடைபெற முடியுமானால, யுத்தம் பல ஆண்டுகளுக்கு முன்னரே தமிழர் தரப்பிற்கு மாபெரும் வெற்றியை கொடுத்திருக்குமென பல சர்வதேச ஆய்வாளார்கள் கூறுகின்றனர்.
tchrfrance@hotmail.com
ச. வி. கிருபாகரன்

0 Responses to சிறிலங்கா வெற்றிகொண்ட கபடத்தனமான யுத்தம்!- ச. வி. கிருபாகரன்