நாடுகடந்த தழிழீழ அரசாங்கத்தின் கலை கலாசார அமைச்சினால் கனடாவில் இடம்பெற்றிருந்த 'தமிழ் மரபுத் தைத் திருவிழா' நிகழ்வரங்கில் ஒளிபரப்பபட்ட காணொளியுரையிலேயே பிரதமர் வி.உருத்திரகுமாரன் இவ்வாறு தெரிவித்தார்.
உலகிலுள்ள மொழிகளில் மிகத் தொன்மையானதும் இன்று வரை தொடர்ந்து நிலைத்து நிற்பதும் எமது தாய் மொழியான தமிழ் மொழியாகும். திராவிட மொழிகளுக்கு எல்லாம் தாய் மொழி தமிழ். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே முதற் சங்கம், இடைச் சங்கம், கடைச் சங்கமென முச்சங்கள் அமைக்கப்பட்டு பேணி வளர்க்கப்பட்டது தமிழ் மொழி.
தமிழ் மறையெனப் போற்றப்படும் திருக்குறள் உலகப் பொது நூலாகக் கருதப்பட்டு பல்வேறு மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. இத்தகைய பெருமைக்குரிய தமிழ் மக்களுக்கு தனியான நாடு ஒன்று இல்லாதிருப்பது வேதனைக்குரியதாகும் எனத் தெரிவித்த பிரதமர் வி.உருத்திரகுமாரன், தமிழருக்கென தனி நாடாக சுதந்திர தமிழீழத்தினை அமைப்பதே நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் குறிக்கோளாகும் எனத் உறுதிபடத் தெரிவித்திருந்தார்.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் கனேடியப் பிரதிநிதிகளில் ஒருவரான கலை கலாசார துணை அமைச்சர் வின் மகாலிங்கம் அவர்களது நெறிப்படுத்தலில் இடம்பெற்றிருந்த இந்நிகழ்வின் உள்ளடக்கம்:
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை உறுப்பினர் ஈழவேந்தன், கலாநிதி பாலசுந்தரம், என்.டி.பி.கட்சியின் ஒன்ராறியோ மாகாணத் தலைவர் நீதன் சான், தமிழ் கொங்கிரஸ் உறுப்பினர் மருத்துவர் ராம்குமார், கலாசூரி சிவநேசச் செல்வர், அறிவகம் அமைப்பின் தலைவர் அருள்சுப்பிரமணியம், கதிர்ஒளி பத்திரிகை ஆசிரியர் போள் ராஜபாண்டியன் ஆகியோர் தைச்சுடரேற்றி நிகழ்வினை தொடங்கி வைத்திருந்தனர்.
பிரதிநிதிகளின் உரைகள்:
தமிழ் மரபுத் தைத்திருநாள் ஒருங்கிணைப்பாளர் நீதன் சான்,
2009ம் ஆண்டு தமிழீழ அரசு அழிக்கப்பட்ட பின் என்ன செய்வது என்ற கேள்வி எழுந்தது. எமது தமிழீழ தேசத்துக்கு நிரந்தர விடிவினை ஏற்படுத்த நாம் புலம் பெயர்ந்த நாடுகளில் பாடுபட வேண்டும். இங்கு கனடாவில் அறிவகத்தின் உதவியுடன் தை மாதத்தினை தமிழர்களின் நாளாக பிரகடனப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றோம்.
கனடா அரசும் அதனை அங்கீகரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளோம். இம்முயற்சியில் நாற்பது தமிழ் அமைப்புக்கள் ஒன்றிணைந்து செயலாற்றி வருவது பாராட்டுக்குரியதாகும். இவர்களுடன் நாடு கடந்த தமிழீழ அரசும் அக்கறையுடன் போராடி வருகின்றது. எமது போராட்டம் சர்வதேச போராட்டமாக மலர வேண்டும்.
மக்கள் பிரதிநிதி ஈழவேந்தன்:
தைத்திருநாள் தமிழர் திருநாளாகும். ஆனால் இன்று தமிழர்களுக்கென பூமியே இல்லை இந்நிலையில் பொங்கிப் படைப்பது எங்கே? ஏழாம் நூற்றாண்டில் சம்பந்தர் தமிழ் வழிபாட்டுக்கு வழி வகுத்தார். இன்று கனடாவில் அறுபதுக்கு மேற்பட்ட இந்துக் கோயில்கள் உள்ளன. ஆனால் அவற்றில் தமிழுக்கு இடமில்லை. நாம் விழுவது குறையயல்ல விழுந்து எழுவது தான் எமது துணிவு. 2013ம் ஆண்டு ஈழத்துக்கு ஒரு திருப்பு முனையாக அமையட்டும்.
லிபரல் கட்சி எம்.பி. ஜிம் காரியியானிஸ்:
பொங்கல் விழாவில் கலந்து கொண்டு உரையாற்றுவதில் நான் மிக்க மகிழ்ச்சி அடைகின்றேன். இங்குள்ள இளந் தமிழர்கள் உங்களது நாட்டைப் பற்றியும், அங்கு தமிழர்களுக்கு எதிராக ஸ்ரீலங்கா அரசு மேற்கொண்டு வரும் அடாவடித் தனங்களைப் பற்றியும் நன்கு அறிந்து கொள்ள வேண்டும்.
ஸ்ரீலங்கா அரசு சட்டத்தையே மாற்றி அமைத்து வருகின்றது. பிரதம நீதி அரசரையும் பழி வாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றது. எனவே ஸ்ரீலங்கா அரசுக்கு எதிராக நாடு கடந்த அரசாங்கம் போராடி வருவது பாராட்டுக் குரியதாகும்.
றூஜ் றிவர் தொகுதி மாநகர சபை உறுப்பினர் மருத்துவர் றேமன் ஷோ:
கொரியா நாட்டைச் சேர்ந்த நான் 1967ம் ஆண்டு கனடாவுக்கு வந்தேன். அதற்கு முன்னர் நான் வடகொரிய மக்களின் மனித உரிமைகளுக்காகப் போராடினேன். இன்று நான் இங்குள்ள தமிழ் மக்களுடன் நெருங்கிப் பழகி வருகின்றேன் அதனால் நீங்கள் அனுபவித்து வரும் கஷ்டங்களையும்இ துன்பங்களையும் நன்கறிவேன். உங்கள் உறவினர்கள் பலர் சிறிலங்காவில் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
ஒரு நாட்டில் வாழும் சகல மக்களுக்கும் சமமான உரிமைகள் வழங்கப்பட வேண்டும். சம உரிமையினைப் பெறும் உரிமை சகல மக்களுக்கும் இருக்க வேண்டும். இங்கு கனடாவில் பிரிட்டிஸ் கனேடியர்கள். பிரெஞ் கனேடியர்கள் என இரு பிரிவனர் வாழ்ந்து வந்தாலும் அவர்கள் அனைவருக்கும் சமத்துவமான உரிமைகள் வழங்கப்பட்டுள்ளன.
அதுமாத்திரமல்ல இங்கே புலம் பெயர்ந்து வாழ்வோருக்கும் சமத்துவ உரிமை வழங்கப்பட்டுள்ளது. ஆனால் ஸ்ரீலங்காவில் அப்படியல்ல. சிறிலங்காவிலுள்ள தமிழ் மக்களுக்கு சம உரிமை வழங்க ஸ்ரீலங்கா அரசினை வலியுறுத்துமாறு நான் எனது நண்பரான ஐ.நா.செயலாளர் பன்கி மூனுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளேன்.
நான் ஒரு நாள் சிறிலங்காவுக்குச் சென்று இதனை வலியுறுத்து வேன். கனடா குடிவரவு அமைச்சர் ஜேசன் கெனியும்சிறிலங்கா அரசிடம் அதனை வலியுறுத்தி உள்ளார்.
யாழ்.பல்கலைக்கழக தமிழ்த்துறை விரிவுரையாளர் பொன் அருந்தவநாதன்:
தமிழ் மண்ணை மீட்கப் போராடியோர் மாத்திரமல்ல தமிழ் மரபுக் கலை களை மீட்கப் போராடும் கலைஞர்களும் போராளிகள் தான். நாட்டுக் கூத்து, வில்லுப் பாட்டு, நாடகம் ஆகியன இன்று புலம் பெயர் நாடுகளிலும் பேணி வளர்க்கப்பட்டு வருகின்றன என தெரிவித்தார்.
0 Responses to தமிழர் திருநாளுக்கான கனேடிய மாநாகர சபைகளின் அங்கீகாரம் பெருமைக்குரியது