Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இந்தியாவின் அஸாம் மாநிலத்தில் நள்ளிரவில் வீடொன்றுக்குள் புகுந்து பெண்ணொருவரை வல்லுறவுக்குட்படுத்திய அரசியல்வாதியொருவர் நையப்புடைக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்து தெரியவருவது.

காணொளி இணைப்பு


அசாம் மாநிலத்தின் சிராங் மாவட்டத்தைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவரான பிக்ரம் சிங் பிராமா என்பவர் அப்பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவரின் வீட்டுக்குள் நள்ளிரவு 2 மணியளவில் புகுந்து அவரை வல்லுறவுக்குட்படுத்தியுள்ளார்.

இந்நிலையில் பெண்ணின் சத்தம் கேட்டு ஓடி வந்த அயலவர்கள் அவரை பிடித்து நையப்புடைத்துள்ளனர். ஆண்கள் மட்டுமன்றி பெண்களும் அந்நபரை நன்றாகத் தாக்கியுள்ளனர்.

இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

இதனையடுத்து பொலிஸார் அவரை கைது செய்துள்ளனர்.
இச்சம்பவத்தின் காணொளியும் இணையத்தில் வெளியாகியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

டெல்லியல் மருத்துவ கல்லூரி மாணவியொருவர் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு பின்னர் உயிரிழந்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் இச்சம்பவமும் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 Responses to நள்ளிரவில் வல்லுறவு: பெண்களிடம் அடிவாங்கிய அரசியல்வாதி! (காணொளி இணைப்பு)

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com