Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் விடுதலையை வலியுறுத்தி யேர்மனி பெர்லின் நகரில் மக்கள் அதிகமாக நடமாடும் இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்படுள்ளன.

மாவீர்களை வணங்கி  தீபம் ஏற்றியதுக்கு யாழ். பல்கலைகழக மாணவர்கள் மீது சிங்கள பௌத்த இனவெறி அரசு காடுமிராண்டித்  தனமான வன்முறையை பிரயோகித்து, சில மாணவர்களை கைத்து செய்துள்ளது.

ஒரு மாதமாக பல்வேறு பொய்யான குற்றங்களை மாணவர்கள் மீது சுமத்தி இன்று வரை  அவர்கள் விடுவிக்கப்படவில்லை. மாறாக தொடர்ந்தும் மாணவர்கள் மீதான வன்முறையை சிங்கள அரசு மேற்கொள்கின்றது.

அந்த வகையில் இரண்டு நாட்களாக பெர்லின் நகரத்தில் பல்வேறு மாவட்டங்களில் பல்கலைகழக மாணவர்களின் விடுதலையை வலியுறுத்தியும் சிறிலங்கா அரசு தமிழர்கள் மீது மேற்கொள்ளும் இனவழிப்பை வேற்றின மக்களிடமும், மாணவர்களிடமும் கொண்டு செல்லும் முகமாக பல்கலைக்கழகங்களில், கடை வீதிகளில், புகையிரத நிலையங்களில் நூற்றுக்கணக்கான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் கைதை தொடர்ந்து பல்வேறு புலம்பெயர் நாடுகள் எங்கும் பல போராட்டங்களை, அரசியல் சந்திப்புகளை இளையோர்கள், மாணவர்கள்,தேசிய தமிழ் அமைப்புகள் நிலத்திலும் புலத்திலும்  செய்திருந்தார்கள்.

அந்த உணர்வோடு இன்றும் பல வகையான போராட்டங்களை தொடர்ந்து செய்ய வேண்டிய கடமையில் நாம் இருப்பதாக யேர்மனி ஈழத்தமிழர் மக்கள் அவை தெரிவித்துள்ளது.

0 Responses to யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் விடுதலையை வலியுறுத்தி யேர்மனியில் சுவரொட்டிகள்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com