கோவை மாவட்டம்
வால்பாறையை அடுத்துள்ள சோலையார் எஸ்டேட்டில் அரசு நடுநிலைப்பள்ளி
செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 174 மாணவ -மாணவிகள் படித்து
வருகிறார்கள்.
மேலும் அந்த செக்ஸ்
காட்சிகள் செல்போன்களிலும் உலா வந்தன. தலைமை ஆசிரியரே இதுபோன்ற அநாகரீக
செயலில் ஈடுபட்டால் எங்கள் குழந்தைகளை எப்படி பள்ளிக்கு அனுப் புவது? என்று
பெற்றோர்கள் கொதித்தெழுந்தனர்.
வகுப்பறையில்
பாலியில் செயலில் ஈடுபட்ட தலைமை ஆசிரி யர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
என வலியுறுத்தி பெற்றோர்களும், மாணவ-மாணவிகளும் சாலை மறியல் போராட்டத்தில்
ஈடுபட்டனர்.
தகவல்
அறிந்ததும் போலீசார் விரைந்து வந்து அவர்களை சமரசப்படுத்தி அனுப்பி
வைத்தனர். இதற்கிடையே பாலியல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள தலைமை ஆசிரியர்
உதயனை “சஸ்பெண்டு” செய்து மாவட்ட தொடக்க கல்வி அதிகாரி கணேசமூர்த்தி
உத்தரவிட்டுள்ளார்.
பின்னர்
அவர் நிருபர்களிடம் கூறும் போது, தலைமை ஆசிரியர் உதயனை உடனடியாக பதவி
நீக்கம் செய்யக் கோரி பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் போராட்டத்தில்
ஈடுபட்டனர். அதன் அடிப்படையில் உதயன் தற்காலிக பணி நீக்கம் (சஸ்பெண்டு)
செய்யப்பட்டுள்ளார்.
அவர்
குற்றமற்றவர் என்பதை நிரூபணம் செய்யும் வரை அவர் சஸ்பெண்டில் இருப்பார்.
பள்ளியை தொடர்ந்து நடத்த வேண்டும் என்றும் இந்த பிரச்சினையை முடிவுக்கு
கொண்டு வரவேண்டும் என்ற அடிப்படையிலேயே அவர் மீது நடவடிக்கை
எடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத் தப்பட்டு வருகிறது
என்றார்.




0 Responses to பள்ளி வகுப்பறையில் ஆசிரியையுடன் உல்லாசம்: தலைமை ஆசிரியர் சஸ்பெண்டு