Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நாட்டில் நீதித்துறையே நீதி கேட்டுப் போராடி வருகையில் தமிழர்களுக்கு இலங்கை அரசாங்கம் நீதி வழங்கும் என எதிர்பார்க்க முடியாது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா தெரிவித்தார்.

மட்டு.களுவாஞ்சிகுடி பிரதேசத்துக்குட்பட்ட கோட்டைக்கல்லாறு சமூக உயர் கல்வி சேவைகள் சங்கத்துக்கு பாராளுமன்ற உறுப்பினர் பொன். செல்வராசாவின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் இருந்து பெற்றுக்கொடுக்கப்பட்ட அலுவலக உபகரணங்களை கையளிக்கும் நிகழ்வு இடம்பெற்றது.
 
சமூக உயர் கல்வி சேவைகள் சங்கத்தின் தலைவர் சி.அகிலன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா, கிழக்கு மாகாணசபை உறுப்பினர் மா.நடராசா ஆகியோர் கலந்துகொண்டு பொருட்களை வழங்கி வைத்தனர்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர்,
நாங்கள் பல்லினம் வாழுகின்ற நாட்டிலே சிறுபான்மைச் சமூகமாகவுள்ளோம். அந்த சிறுபான்மை சமூகத்திலே நாங்கள் அக்கறையாக இருந்தால்தான் ஓரளவு தலை நிமர்ந்த சமூகமாக வாழமுடியும்.

இன்று எந்த வாய்ப்பும் இல்லாது அயல் நாட்டுக்கு புலம்பெயர்ந்து செல்கின்றனர். அண்மையில் அவுஸ்ரேலியாவுக்கு அதிகளவானோர் சென்றுள்ளனர். ஏற்கனவே ஒரு மில்லியன் தமிழ் மக்கள் வெளிநாட்டுக்கு புலம்பெயர்ந்துள்ளனர்.

இன்னும் இது தொடர்கதையாக இருக்குமாகவிருந்தால் நாங்கள் இந்த நாட்டில் இருக்கின்ற மூன்று இனங்களில் மூன்றாவது நிலைக்கு தள்ளப்படவேண்டிய நிலையேற்படும். கிழக்கு மாகாணத்தில் முதலாவது இடத்தில் இருந்த நாம். இரண்டாவது இடத்துக்கு தள்ளப்பட்டு, மூன்றாவது இடத்துக்கு தள்ளப்படும் நிலைக்கு மாறிக்கொண்டுள்ளோம்.

திருகோணமலையில் முதலாவது இடத்தில் இருந்து தமிழர்கள் இன்று இரண்டாவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஏற்கனவே அம்பாறையில் நாங்கள் மூன்றாவது இடத்தில் இருக்கின்றோம்.

மட்டக்களப்பில் மட்டும் முதலாவது இடத்தில் சனச்செறிவாக தமிழர்கள் உள்ளனர்.அந்த சனச்செறிவை கூட மட்டுப்படுத்தி அதிலும் சில குடியேற்றங்களை ஏற்படுத்தி, அந்த சனச்செறிவை இல்லாது செய்யும் பணிகளிலேதான் அரசாங்கம் ஈடுபட்டுவருகின்றது என தெரிவித்தார்.

0 Responses to நீதித்துறையே நீதி கேட்டுப் போராடும் போது தமிழர்களுக்கு நீதி கிடைக்குமா?

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com