Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நாட்டுப்பற்றாளர்வைத்திலிங்கம்பரமேஸ்வரன்அவர்களதுமுதலாம் ஆண்டு நினைவு நாள் யேர்மனில் உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டது .


நினைவுநாளில் 
நாட்டுப்பற்றாளர்வைத்திலிங்கம்பரமேஸ்வரன் அவர்களின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து சுடர் , மலர் வணக்கம் செலுத்தப்பட்டது .
தொடர்ந்து நாட்டுப்பற்றாளர் வைத்திலிங்கம் பரமேஸ்வரன் அவர்களின் நினைவுகளை மீட்டு , அவர் தமிழீழ மக்களுக்கு ஆற்றிய பணி விடையமாக உரையாற்றப்பட்டது . புலம்பெயர் வாழ்விலும், தாயகத்தின் விடுதலையை உயிர் மூச்சாகச் சுமந்து பணியாற்றிய பரமேஸ்வரன் ஒரு உதாரண தமிழீழ மகனாக எமக்கெல்லாம் வாழ்ந்து காட்டியுள்ளார்.

தேசிய விடுதலைமீதானஉறுதியும், விடுதலைப்புலிகள் மீதான நம்பிக்கையும், தேசியத்தலைவர் அவர்கள் மீதான பெருமதிப்பும் அவரது வாழ்நாள் இலட்சியமாக இருந்தது.
இறுதி மூச்சுவரை அவர் தமிழீழவிடுதலைக்கான அர்ப்பணிப்போடு பணியாற்றினார். அதன் காரணமாக விடுதலைப்புலிகளால் நாட்டுப்பற்றாளர் என்ற மதிப்பு அளிக்கப்பட்டுள்ளது.

தமிழீழ விடுதலைக்காக வாழந்தவர் எவரும் மரணத்தின் மூலம் மறைந்து விடுவதில்லை. அவர்கள் எங்கள் மனங்களில் என்றென்றும் வாழ்ந்து கொண்டே இருப்பார்கள். தமிழீழ விடுதலை நோக்கிய எங்கள் ஒவ்வொரு நகர்வுக்கும் அவர்கள் எமக்குத் துணையாக நிற்பார்கள்.
அவர்களது கனவுகளோடு நாங்கள் முன்னேறிச் சென்று தமிழீழ மண்ணை விடுவிப்போம் என நினைவு நிகழ்வில் கலந்து கொண்ட மக்களால் உறுதி எடுக்கப்பட்டது .






தமிழரின்தாகம், தமிழீழத்தாயகம்!

0 Responses to நாட்டுப் பற்றாளர் வைத்திலிங்கம் பரமேஸ்வரன் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு நாள் (படங்கள் இணைப்பு)

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com