Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”


இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக தமிழ்நாட்டில் கடந்த 1 மாதமாக போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது. கல்லூரி மாணவர்கள், சினிமா துறையினர், தமிழ் ஆர்வலர்கள், தொண்டு நிறுவனத்தினர் என பல்வேறு தரப்பினரும் ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் போன்ற போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இப்போது திருநங்கைகளும் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் குதித்துள்ளனர்.

தண்டையார்பேட்டை திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் அப்பல்லோ ஆஸ்பத்திரி அருகே இன்று திருநங்கைகள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். இதில் வடசென்னை பகுதியில் உள்ள திருநங்கைகள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

தமிழ் ஈழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பினர் ஒருங்கிணைப்பாளர் பிரபாகரன், தினேஷ் ஆகியோர் தலைமையில் இன்று காலை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் எந்த மாநிலத்திலும் இலங்கை வீரர்கள் விளையாட கூடாது என்பதை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. இலங்கைக்கு எதிராக மாணவர்கள் கண்டன கோஷங்களும் எழுப்பினர்.



1 Response to ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக திருநங்கைகள் நடத்திய பட்டினிப் போர் (காணொளி, படங்கள் இணைப்பு)

  1. நன்றி. நன்றி.. நன்றி...

     

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com