பிரான்சின் புறநகர் பகுதிகளில் ஒன்றான லூவர் தமிழ்ச்சங்கத்தின்
தமிழ்ச்சோலையின் 10 வது ஆண்டு நிறைவு விழா 20.04.2013 சனிக்கிழமை மிகவும்
சிறப்பாக நினைவு கூரப்பட்டது.
நினைவுச்சுடர் லூவர் மாநகர முந்நாள் மற்றும் இந்நாள் முதல்வர்கள் இருவரும் ஏற்றி வைத்தனர். அவர்களுடன் சங்க உறுப்பினர்களும் ஏற்றி வைத்தனர். அகவணக்கம் செலுத்தப்பட்டு தமிழ்ச்சோலைக்கீதம் இசைக்கப்பட்டு தலைவர் உரையும் நிகழ்த்தப்பட்டது. மாணவர்கள் கலைதிறன் வெளிப்பாடுகளாக முதலில் கண்ணன் நடனமும் அதனைத் தொடர்ந்து திருக்குறள் ஒப்புவித்தல், உயிர் எழுத்துக்கள் இன்னிசையிலும், கும்மி நடனம், பேச்சு, எழுச்சி நடனம், காவடி நடனம், நாடகம் வில்லுப்பாட்டு, போன்ற நிகழ்வுகள் மாணவர்களால் வழங்கப்பட்டது.
மாநகரமுதல்வர் சிறப்புரையாற்றியிருந்தார். ஆசிரியர்கள் தமிழ்ச்சோலை தலைமை பணியகத்தால் மதிப்பளிக்கப்பட்டனர். மற்றும் போட்டிகளில் பங்கு பற்றி வெற்றியீட்டிய மாணவர்கள் சான்றிதழ்களும் நினைவுப்பரிசில்களும் வழங்கி மதிப்பளிக்கப்பட்டனர். கடந்த காலங்களில் தமிழ்ச்சோலைகளில் பணியாற்றியவர்கள்,தலைவர்களும் மதிப்பளிக்கப்பட்டனர். ஆண்டு மலரும் வெளியிட்டு வைக்கப்பட்டது. தற்போதைய காலச்சூழ்நிலை, அரசியல் நிலைப்பாடுகள் செய்யப்பட வேண்டிய பணிகள் செய்யப்பட்டுக்கொண்டிருக்கின்ற பணிகள் பற்றி தமிழீழ மக்கள் பேரவை பேச்சாளர் திரு. மோகனதாசு அவர்கள் உரையாற்றியிருந்தார். தமிழ்ச்சங்க கூட்டமைப்பின் பொறுப்பாளர் திரு. பாலசுந்தரம் மற்றும் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் பரப்புரை மக்கள் தொடர்பாளர் மேத்தா ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றியிருந்தனர்.
நன்றியுரையுடன் நிகழ்வு இனிதே நிறைவு பெற்றது.

0 Responses to பிரான்சின் புறநகர் பகுதிகளில் ஒன்றான லூவர் தமிழ்ச்சங்கத்தின் தமிழ்ச்சோலையின் 10 வது ஆண்டு நிறைவு விழா (படங்கள் இணைப்பு)