வடகொரியா நான்காவது அணுச்சோதனை செய்வதற்கு தயாராக இல்லை எனவும், வடகொரியாவின் முக்கிய அணு சோதனை
செய்யும் இடத்தில் வழமைக்கு மாறான நடமாட்டங்கள் எதுவும் தென்படவில்லை எனவும் தென்கொரியா தெரிவித்துள்ளது.
வடகொரியா நான்காவது அணுச் சோதனைக்கு தயாராவதாக தென்கொரியாவின் அமைச்சர் ஒருவர் நாடாளுமன்ற விசாரணை ஒன்றில் தெரிவித்திருந்த நிலையில், இவ்வாறாக கூறி மேலும் பதற்றத்தை அதிகப்படுத்த வேண்டாம். அப்படி ஒரு சமிக்கையும் கிடைக்கவில்லை என தென்கொரிய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
முன்னதாக வடகொரியா எந்த நேரத்திலும் ஏவுகணை சோதனையை மேற்கொள்ள வாய்ப்பிருப்பதாக தொடர்ந்து தகவல் வெளிவந்தவாறு இருந்தன. எதிர்வரும் புதன்கிழமைக்குள் வடகொரியாவிலிருந்து அனைத்து வெளிநாட்டு தூதர்களும் வெளியேற வேண்டும் என வடகொரிய அரசு உத்தரவிட்டிருப்பதையும் தென் கொரியா சுட்டிக்காட்டியிருந்தது.
இதனிடையே வடகொரியா போர் ஒத்திகை பயிற்சிகளையும் தற்போது தொடங்கியிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

0 Responses to வடகொரியா நான்காவது ஏவுகணை பரிசோதனையை செய்யுமா செய்யாதா?