தேமுதிக எம்எல்ஏக்கள் 6
பேரை 6 மாதம் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை கண்டித்து கண்டன பொதுக்கூட்டம்
01.04.2013 அன்று சென்னையில் நடந்தது. இதில் கலந்து கொண்டு பேசிய
அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த்,
தேமுதிகவை
யாராலும் அழிக்க முடியாது. இந்த விஜயகாந்த் இல்லை என்றாலும் வேறு யாராவது
வந்து இந்த கட்சியை நடத்திக்கிட்டு இருப்பாங்க. அடுத்த முறை நீங்க (அதிமுக)
வரமாட்டீங்க. நாட்டுக்கு நல்லது செய்பவர்கள் வரவேண்டும். எனது வேண்டுகோள்
அதுதான். விஜயகாந்த்தை சோதித்துப் பார்க்கிறார்கள். நான் அமைதியாக
இருக்கிறேன். வருவேன் சுத்துவேன். சுத்துவேன். சுத்தத்தான் போகிறேன்.
சுத்தும்போது பார்ப்போம். இலங்கை தமிழர்களுக்காக எனது பிறந்த நாளை நான்
கொண்டாடவில்லை, இலங்கை பிரச்சனைக்காக அனைத்துக் கட்சிகளும் 2014ல் நடக்கும்
பாராளுமன்ற தேர்தலை புறக்கணித்தால் தேமுதிகவும் புறக்கணிக்கும். இவ்வாறு
பேசினார்.




0 Responses to ஈழத்தமிழர்களுக்காக அனைத்துக் கட்சிகளும் புறக்கணித்தால் தேமுதிகவும் புறக்கணிக்கும்: விஜயகாந்த்