Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”


பாராளுமன்ற தேர்தலில் 12 தொகுதிகளில் தனித்து போட்டியிடப்போவதாக நாடாளும் மக்கள் கட்சியின் தலைவரும், நடிகருமான கார்த்தி தெரிவித்துள்ளார்.

மதுரையில் திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
பாராளுமன்ற தேர்தலில் நாடாளும் மக்கள் கட்சி, தேவர் இன மக்கள் பெரும்பாண்மை ஓட்டு வங்கி உள்ள 12 தொகுதிகளில் போட்டியிடும். கூடங்குளம் அணுஉலை போராட்டத்தில் மத்திய அரசு சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்களின் போராட்டத்தை அரசு கொச்சைப்படுத்தக் கூடாது. மக்களின் கோரிக்கைகளை பரிசீலனை செய்ய வேண்டும்.

இந்தியாவின் வெளியுறவு கொள்கையால் ஈழத்தமிழர்களின் விஷயத்தில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. ஈழத்தமிழர்கள் விஷயத்தில் தமிழக மக்களின் கோரிக்கையை மத்திய அரசு ஏற்க வேண்டும். நாளை நடிகர் சங்கம் சார்பில் சென்னையில் நடைபெறும் ஈழத்தமிழர்களுக்கான உண்ணாவிரதத்தில் கலந்து கொள்வேன் என்றார்.

பாராளுமன்ற தேர்தலில் நீங்கள் போட்டியிடும் தொகுதி எது என்ற கேள்விக்கு, அது சஸ்பென்ஸ். தேர்தல் நேரத்தில் வெளியிடுவேன் என்றார்.

0 Responses to பாராளுமன்ற தேர்தலில் 12 தொகுதியில் தனித்து போட்டி! மதுரையில் கார்த்தி பேட்டி!

Post a Comment

Followers

அதிகமாக வாசிக்கபட்டவை...

தொடர்புக்கு: vannionline@gmail.com