Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”


பூரண மதுவிலக்கை வலியுறுத்தும் மூன்றாம் கட்ட நடைபயணத்தை, 13-ஆம் நாளான  இன்று காலை 7 மணிக்கு குமாரபாளையத்தில் தொடங்கிய  வைகோ, பள்ளிப்பாளையம் வழியாகச் சென்றார். 

அவர் வரும் வழியில்,  கருங்கல்பாளையத்தில் பூரண மதுவிலக்கு கோரி,  மாணவர்கள் குழந்தைகள் உண்ணாவிரதம் இருந்தனர்.  மாலை 6 மணியளவில் அவர்கள் மத்தியில் வைகோ பேசிய போது, ‘’என் அரசியல் வாழ்க்கையில் எத்தனையோ போராட்டங்களுக்கு சென்றிருக்கிறேன்.  

குழந்தைகள் போராட்டத்தை இன்றுதான் முதல் முறையாகப் பார்க்கிறேன்.
 காலையிலிருந்து சாப்பிடாமல் இவ்வளவு நேரம் பொறுமையாக இருக்கின்றீர்கள்.  உங்களிடம் அதிக நேரம் எடுத்துக் கொள்ள நான் விரும்பவில்லை.. இந்தக் குழந்தைகளுக்காகவாவது மதுக்கடைகளை மூடுங்கள்.

தமிழகத்தில் சராசரியாக 1 கோடி பேர் மதுவுக்கு அடிமையாகி இருக்கிறார்கள். வருங்கால சமுதாயத்தைக் காப்பாற்றுவதற்காகத்தான் நான் நடக்கிறேன். நீங்கள் நன்றாக இருக்க வேண்டும். மாணவச் சமுதாயமும் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான், வரும் வழியெங்கும் மதுவுக்கு எதிரான முழக்கங்களை எழுப்பி வருகிறேன். 

 அப்போது பெண்கள் என் கையைப் பிடித்துக் கொண்டு மதுவை ஒழிக்க வேண்டும் என்று கண்ணீர் வடிக்கிறார்கள். அதற்காகவாவது தமிழகத்தில் மதுக்கடைகளை பூட்ட வேண்டும். வீட்டில் உங்கள் தந்தை மதுப்பழக்கத்துக்கு அடிமையானால் அவர்களைத் திட்டாதீர்கள். அதனால், அவர்கள் மதுப்பழக்கத்தை விட்டுவிட  மாட்டார்கள். மதுக்கடைகளை அடைத்தால் ஒழிய, இந்தப் பழக்கத்தை விட முடியாது’’ என்று உணர்ச்சி வசப்பட்டார். 

குழந்தைகளுக்கும் மாணவர்களுக்கும் பழச்சாறு கொடுத்து உண்ணாவிரதத்தை முடித்து வைத்த வைகோ,  நடைபயணத்தை தொடர்ந்தார். 


-சி.என்.இராமகிருஷ்ணன்

0 Responses to மாணவர்கள், குழந்தைகள் உண்ணாவிரதம் : வைகோ ஆவேசம்! (படங்கள் இணைப்பு)

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com