பல ஆண்டுகளாக தமிழின விடுதலைக்காக போராடி வருகின்ற
தமிழ் திரைப்பட இயக்குனரும் நடிகருமான தமிழ் உணர்வாளர் மதிப்புக்குரிய திரு
மணிவண்ணன் அவர்களுடனான சந்திப்பு நேற்று சனிக்கிழமை காலை 10 மணியளவில்
அன்னை பூபதி தமிழ்கலைக்கூடத்தின் றொம்மன் வளாகத்தில் நோர்வே தமிழர்
ஒருங்கிணைப்பு குழுவால் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது.
தன்னுடைய துறைசார்ந்து சில வியாபார நிறுவனங்களின் அழைப்பில் வந்திருந்த போது தமிழர் ஒருங்கிணைப்பு குழுவையும் தமிழீழ மக்களையும் பார்ப்பதே தன்னுடைய முதற்பணியாக கொண்டதால் மக்களை சந்திப்பதர்க்கான ஏற்பாடுகளை மிக குறுகிய நேரத்தில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
இச்சந்திப்பில் கலந்து கொண்ட திரு மணிவண்ணன் அவர்கள் தமிழீழ விடுதலைக்கான ஆக்கபூர்வமான கருத்துக்களை பதிவு செய்ததோடு அவரின் சில கருத்துக்கள் ஆழ்மனதில் ஈரத்தையும் ஏற்படுத்தியது.
குறிப்பாக தன்னுடை பெற்றோர்களின் மரணத்தில் அழாமல் மனதை திடமாக வைத்திருந்ததாகவும் ஆனால் தன்னோடு பாசமாக பழகிய தம்பி தங்கைள் முள்ளிவாய்க்காலில் புதைத்த இடமே தெரியாமல் போன போது தான் மனம் இடிந்து பல மாதங்களாக அழுததாகவும் கூறி அவருடைய குரல் தளர்ந்து போனதையும் பார்க்க முடிந்தது.
இதேவேளை தான் தமிழீழத்தில் பிறந்திருந்தால் ஒரு போராளியாக பிறந்து சிறீலங்காவின் ஆக்கிரமிப்புக்கு எதிராக போராடி மாவீரனாக புதைக்கப்பட்டிருப்பேன் என்பதையும் உறுதியோடு கூறியிருந்தார்.

0 Responses to நோர்வே தமிழர்களுடன் தமிழீழ உணர்வாளர் நடிகர் மணிவண்ணன்! (படங்கள் இணைப்பு)