தமிழ்நாடு, இராமேஸ்வரத்திலிருந்து நேற்று மீன்பிடிக்க
சென்ற மீனவர்களை இலங்கை கடற்படையினர் கற்கள் வீசி துரத்தியதால் மீனவர்கள்
மத்தியில் கடும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த மாதம் 13ம் தேதி இராமேஸ்வரத்திலிருந்து
மீன்பிடிக்க சென்ற 19 மீனவர்களை இலங்கை கடற்படையினர் பிடித்துச் சென்றனர்.
பின்னர் மன்னார் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்ட இவர்கள் தற்போது இலங்கை
அனுராதபுரம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இதையடுத்து சிறைவைக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்க கோரி கடந்த 15 நாட்களாக இராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லாமல் வேலை நிறுத்தம் செய்தனர்.
இதனிடையே கடந்த 30ம் தேதி 5ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் ரயில் மறியலில் ஈடுபட்டனர். ஆனாலும் மீனவர்கள் விடுவிக்கப்படவில்லை.
இதனிடையே இம்மாதம் 15ம் தேதி முதல் மீன்பிடி தடை காலம் தொடங்க உள்ளது. இதனால் அன்றிலிருந்து 45 நாட்களுக்கு மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல முடியாது.
இதையடுத்து இடைப்பட்ட நாட்களில் 5 முறை மட்டுமே கடலுக்கு செல்லக் கூடிய நிலை இருந்தது. இதனால் மீனவர்கள் தங்களது வேலை நிறுத்தத்தினை கைவிட்டு நேற்று காலை மீன்பிடிக்க சென்றனர்.
633 விசைப்படகுகள் மீன்பிடிக்க செல்வதற்கான அனுமதியை பெற்றிருந்தும், இலங்கை கடற்படையின் மீதான அச்சத்தின் காரணமாக 350க்கும் குறைவான படகுகளே மீன்பிடிக்கச் சென்றன.
இந்த நிலையில் இன்று அதிகாலை தனுஷ்கோடி - கச்சதீவு இடைப்பட்ட பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்த மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் கற்களை வீசி விரட்டியுள்ளனர். இதில் அதிஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
இதன் பின் வேறு பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்த மீனவர்களின் படகுகளை சுற்றி வளைத்த இலங்கை கடற்படையினர் கடலில் பாய்ச்சியிருந்த வலைகளையும், மீன்பிடி சாதனங்களையும் வெட்டியுள்ளனர். இதனால் தொடர்ந்து மீன்பிடிக்க முடியாமல் மீனவர்கள் இன்று காலை கரை திரும்பினர்.
இரு வாரங்கள் கழித்து மீன்பிடிக்க செல்லாததால் நல்ல மீன்பாடு இருக்கும் என எண்ணியிருந்தனர். ஆனால் இலங்கை கடற்படையின் தொல்லையால் போதிய மீன்பிடிக்க முடியாமல் ஏமாற்றத்துடனேயே கரை திரும்பினர்.
இதனால் ஒவ்வொரு மீன்பிடி படகிற்கும் 30ஆயிரம் முதல் 40ஆயிரம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இலங்கை கடற்படையினரின் இந்த தாக்குதலால் இராமேஸ்வரம் மீனவர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

0 Responses to தமிழ்நாடு, இராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை மீண்டும் தாக்குதல் (படங்கள் இணைப்பு)