Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”


சவுதி அரேபியாவில் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட நிதாகத் எனும் புதிய சட்டத்தினால், லட்சக்கணக்கான இந்தியர்கள் அங்கு வேலை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருந்தனர்.

சவுதி அரேபிய மக்களுக்கு தொழில் வாய்ப்புக்கு முன்னுரிமை கொடுக்கவும், சட்டவிரோதமாக வேலைப்பதிவின்றி அங்கு தங்கியிருக்கும் வெளிநாட்டவர்களை வெளியேற்றவும் இச்சட்டம் வகை செய்கிறது.

இதையடுத்து உரிய ஆவணங்கள் இன்றி சவுதியில் தங்கியிருந்த வெளிநாட்டினரை கண்டுபிடித்து உடனடியாக வெளியேற்றும் நடைமுறை கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது.

இதனால், இதுவரை 2 இலட்சம் வெளிநாட்டினர் வெளியேற்றப்பட்டிருப்பதாகவும், 6 லட்சம் சவுதி குடிமக்கள் தனியார் துறை நிறுவனங்களில் வேலை வாய்ப்பு பெற்றுள்ளதாகவும் சவுதி உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் களவாக வேலை செய்து பிடிபடும் நபர்கள் சிறைத்தண்டனையையும் எதிர்கொண்டு தண்டனைக்காலத்தின் பின்னர் அவரவர் நாட்டு தூதரகங்கள் மூலமாக சவுதியிலிருந்து வெளியேற்றப்பட்டு வருகிறார்கள்.

இதனால் இந்த அசௌகரியத்தை தவிர்ப்பதற்காக பெருமளவிலான சட்டவிரோத இந்தியப்பணியாளர்கள் முன்கூட்டியே சவுதியிலிருந்து வெளியேற தொடங்கியுள்ளனர். அவர்களில் கேரள மாநிலத்தவர்களுக்கு உதவுவதற்காக கேரள அரசு, சவுதியின் மூன்று சர்வதேச விமான நிலையங்களிலும், அவசர உதவி மையங்களை திறந்துள்ளது.

இந்நிலையில், இவர்களை வெளியேற்றுவது தொடர்பான உடனடி நடவடிக்கைகளை கைவிட்டு, வெளிநாட்டினர் தங்களது ஆவணங்களை முறைபடுத்திக் கொள்ளும் வகையில் 3 மாத கால அவகாசம் வழங்குமாறு சவுதி நாட்டின் தொழிலாளர் நலத்துறை மந்திரி, உள்துறை மந்திரி ஆகியோருக்கு சவுதி மன்னர் அப்துல்லா நேற்று உத்தரவிட்டார்.

0 Responses to சவுதியிலிருந்து வேலை இழந்த இந்தியர்கள் வெளியேறுவதற்கு மூன்று மாத கால அவகாசம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com