மத்தியில் உள்ள காங்கிரஸ் அரசையும், னபிரதமரையும் காந்தியின் மூன்று குரங்குகளுடன் ஒப்பிட்டு பாஜகவின் நிதின் கத்காரி பேசிய விவகாரம் சர்ச்சையாகியுள்ளது.
மகாத்மா காந்தியின் தீயதை பார்க்காதே. தீயதை பேசாதே, மற்றும் தீயதை கேட்காதே எனும் கோட்பாட்டை உணர்த்தும் வகையில் இருக்கும் மூன்று குரங்குகளை வேடிக்கையாக தற்போதைய மத்திய அரசுடன் ஒப்பிட்டு பேசினார் நிதின் கத்காரி.
நாக்பூரில் பாஜகவின் ஆண்டு விழாவில், அவர் தனக்கு வந்த எஸ்.எம்.எஸ் செய்தியை பகிர்ந்து கொண்டார்.
'மேலோகத்தில் இருந்து காந்தியடிகள் சித்திரகுப்தனிடம் எனது கோட்பாட்டின் அமர்ந்திருக்கும் முன்று குரங்குகள் தற்போது எப்படி இருக்கின்றன எனக்கேட்க சித்திரகுப்தன் இப்படி பதில் சொன்னாராம்.
'கண்ணை மூடிக்கொண்டிருக்கும் முதல் குரங்கு போல் இந்திய நாட்டின் சட்டம் உள்ளது. வாயை மூடிக்கொண்டிருக்கும் குரங்கைப் போல் எது குறித்தும் பேசாமல் பிரதமர் மன்மோகன் சிங் இருக்கிறார். காதை மூடிக் கொண்டிருக்கும் குரங்கிற்கு இணையாக ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது' என்றார் நிதின் கத்காரி
இதையடுத்து பிரதமரை குரங்குக்கு ஒப்பிட்டு நிதின் கத்காரி பேசிவிட்டதாக புதிய சர்ச்சை எழுந்துள்ளது.




0 Responses to பிரதமரை குரங்கு என்பதா? - நிதின் கத்காரி கருத்துக்களால் சர்ச்சை