Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”


நடிகை குஷ்பூ திமுகவில் இருந்து விலகி, காங்கிரசில் சேரப்போவதாக தகவல்கள் கசிந்து வருகின்றன. இது வெறும் வதந்தி என்று குஷ்பூ கண்டனம் விடுத்துள்ளார்.

நடிகை குஷ்பூ கடந்த திமுக ஆட்சியின் போது, திமுகவில் இணைந்தார். அன்றுவரை திமுகவின் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். இதற்கிடையில் சில நாட்களளுக்கு முன்னர், காங்கிரசில் தற்போது இணைந்துள்ள தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியை  குஷ்பூ சந்தித்து பேசியதாகத் தெரிகிறது. இவர்களுக்கிடையில் நடந்த இந்த சந்திப்பினால் குஷ்பூ விரைவில் காங்கிரசில் இணையப் போகிறார் என்று அன்று முதல் தகவல்கள் வெளியாகிய வண்ணம் உள்ளது.

இது குறித்து குஷ்பூவிடம் கேட்டபோது, "நான் திமுகவில்தான் இன்னமும் இருக்கிறேன் இனியும் இருப்பேன். நான் சிரஞ்சீவியை சந்தித்து பேசியது ஒரு நட்பு ரீதியில்தான். இது அரசியலுக்கு அப்பாற்பட்டது. இதற்கும் அரசியலுக்கும் தொடர்பில்லை. எனக்கு வேண்டாதவர்கள் கிளப்பிய வதந்தி இது. இந்த வதந்தியை பரப்பியவர்களை வன்மையாக கண்டிக்கிறேன் என்கிறார்.

0 Responses to காங்கிரசில் சேரப்போவதாக வதந்தி பரப்புவதா? : நடிகை குஷ்பூ கண்டனம்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com