Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”


"தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பின்" சார்பில் இன்று 07/04/2013 ஞாயிறு மாலை திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகில் "மாபெரும் மாணவர் பொதுக்கூட்டம்" நடைபெற்றது. இப்பொதுக்கூட்டத்தை திருச்சி மாவட்ட மாணவர் கூட்டமைப்பு ஏற்பாடு செய்தது. இப்பொதுகூட்டம் காங்கிரஸ் கட்சியினரால் காட்டுமிராண்டித்தனமாக தாக்கப்பட்ட மாணவர்கள் சார்பான  கண்டனக்கூட்டமாகவும்,தமிழக சட்டமன்ற தீர்மானமான "தமிழீழத்திற்கான பொதுவாக்கெடுப்பு" என்ற 7 கோடி தமிழர்களின் விருப்பத்தினை இந்திய நாடாளுமன்றத்தில் தீர்மானமாக நிறைவேற்றவும்,அதனடிப்படையில் இந்தியாவே ஐ.நா.வில்  "தமிழீழத்திற்கான பொதுவாக்கெடுப்பு"  என்ற தீர்மானத்தை கொண்டுவர வலியுறித்தியும் நடைபெற்றது.

இப்பொதுக்கூட்டத்தில் "தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பின்" ஒருங்கிணைப்பாளர்
சீ .தினேஷ் உள்ளிட்ட 15 க்கும் மேற்ப்பட்ட மாணவர் பிரதிநிதிகள் "தமிழீழமே தீர்வு" என்ற ஒற்றை கோரிக்கையை வலியுறித்திப் பேசினார்.இக்கூட்டத்திற்கு இக்கூட்டமைப்பின் நெறியாளர் களான அய்யா பழ.நெடுமாறன்,அய்யா ஆர்.நல்லகண்ணு ஆகியோர் கலந்துகொண்டு காங்கிரஸ் கட்சியினரின் காட்டுமிராண்டித்தனமான மாணவர்கள் மீதான தாக்குதலைக் கண்டித்ததுடன், தமிழக அரசின் சட்டமன்ற தீர்மானத்தினை மத்திய அரசு உடனடியாக நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற வலியுறுத்தினர்.இக்கூட்டத்திற்
கு இந்தி எதிர்ப்பு போராட்ட கால மாணவர் தலைவர்   அய்யா ஜெயப்பிரகாசம் கலந்துகொண்டு உரையாற்றினார். எழுச்சியுடன் நடைபெற்ற இக்கூட்டத்தில் மாணவர்களால் கருத்தாழமிக்க கலைநிகழ்ச்சிகளும் , எழுச்சிப் பாடல்களும் பாடப்பட்டன.

இதன் தொடர்ச்சியாக ஒவ்வொரு மாவட்டங்களிலும் பல்வேறு வடிவங்களில் பொதுக்கூட்டங்களை முன்னெடுக்க உள்ளதாக அதன் ஒருங்கிணைப்பாளர் சீ.தினேஷ் தெரிவித்தார்.மேலும்மாணவர்களின் எழுச்சிமிக்க போராட்டத்தினை மக்களிடம் கொண்டுசேர்த்த ஊடகங்களை/செய்தித்தாள்களை  பாராட்டியதுடன் ,ஊடகங்களின் குரல்வளையை(புதிய தலைமுறை தொலைகாட்சி) நெரிக்கும் விதத்தில் நடந்துகொண்ட ஈ.வீ.கே.எஸ்.இளங்கோவனை இப்பொதுகூட்டம் கண்டிப்பதாகவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.இப்பொதுக் கூட்டத்தில் மாணவர்களும்,பொதுமக்களும் திரளாக பங்கேற்று மாணவர்கள் போராட்டம் "தமிழீழம்"  கிடைக்கும்வரை ஓயப்போவதில்லை என்பதை மெய்பித்துக்காட்டியுள்ளது.




0 Responses to தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பின் பத்திரிகைச் செய்தி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com