தமிழீழ ஆதரவு மாணவர்
அமைப்பு சார்பில் கருத்தரங்கம் சென்னை தி.நகரில் நடைபெற்றது. இதில்
பேராசிரியர் சுப.வீரபாண்டியன் பங்கேற்று உரையாற்றினார்.
மாணவர்கள்
மத்தியில் சுப.வீ. பேசும்போது, ‘’இலங்கையில் ஈழத்தமிழர்களுக்காக செல்வா
தலைமையில் அமைதி வழியில் நடந்தது முதல் கட்ட போராட்டம். அடுத்து பிரபாகரன்
தலைமையில் ஆயுதவழி போராட்டம் நடைபெற்றது.
எப்படி அமைதி வழி போராட்டத்தில் ஒரு பின்னடைவு ஏற்பட்டதோ? அதே மாதிரி ஆயுதவழி போராட் டத்திலும் ஒரு பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது. பின்னடைவு ஏற்பட்டதை நாம் ஒப்புக்கொள்ள வேண்டும். அதற்காக நாம் வெட்கப்படக்கூடாது.

வீழ்வது
தவறல்ல; வீழ்ந்தே கிடப்பதுதான் தவறு. நாம் மீண்டும் எழுவோம். இப்போது
நடப்பது மூன்றாவது கட்ட போராட்டம். ராஜபக்சேவுக்கும் அவனது
கூட்டாளிகளூக்கும் தண்டனை வாங்கி கொடுப்பதும், ஈழத் திற்காக
பொதுவாக்கெடுப்பு நடத்தபடவேண்டும் என்பதும் மூன்றாவது கட்டப்போராட்டம்.
இந்த சிக்கலை உலக நாடுகளூக்கு கொண்டு சென்று அதன் மூலமாக
வெற்றியைப்பெறுவோம்’’ என்று தெரி வித்தார்.
படங்கள் : அசோக்
0 Responses to இது மூன்றாவது கட்டப்போராட்டம் : மாணவர்கள் மத்தியில் சுப.வீ. பேச்சு (படங்கள் இணைப்பு)