Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கின்னஸ் சாதனைக்காக தலை முடியில் தொங்கிய படி ஆற்றின் குறுக்கே கயிறு மூலமாக கடக்க முயன்ற இந்தியர் ஒருவர் பரிதாபமான முறையில் மரணமடைந்துள்ள சம்பவம் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

மேற்குவங்கத்தை சேர்ந்த சைலேந்திர ராய் எனும் குறித்த நபர், கடந்த வருடம், டார்ஜிலிங்கில் உள்ள மலைப்பாதை ரயிலை தனது தலைமுடியால் இழுத்து கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்திருந்தார். நேற்று சிலிகுரி அருகே தீஸ்தா ஆற்றின் குறுக்கே கயிறு கட்டி அதில் தலைமுடியால் தொங்கிய படி ஆற்றை கடக்க முயன்றார். இவரது முயற்சியை பார்ப்பதற்காக நூற்றுக்கணக்கான மக்கள் கூடியிருந்தனர்.

வெள்ளம் கரைபுரண்டு ஓடும் ஆற்றின் குறுக்கே 2 அடி உயரத்தில் கயிறு கட்டப்பட்டது. தனது உடல் பாரத்தால், கயிற்றின் மறுமுனையில் கட்டப்பட்டிருந்த சக்கரத்தை நகர்த்தி ஆற்றை கடக்க முயற்சித்தார். பாதி தூரம் சென்றதும் ராட்டினம் கயிற்றில் சிக்கி கோண்டதால் அதற்கு மேல் நகரவில்லை. ராய் எவ்வளவு முயற்சித்தும் தன்னால் அச்சிக்கலில் இருந்து விடுபடமுடியவில்லை. அந்நேரத்தில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. சிறுது நேரம் சென்றதும் ராயின் கை கால் அசைவுகள் அனைத்தும் திடீரென நின்றுவிட்டன. விபரீதம் நடந்துவிட்டதை உணர்ந்த மக்கள் கயிற்றை பிடித்து கரைக்கு இழுத்தனர். பின்னரே அவர் மாரடைப்பால் ஏற்கனவே இறந்துவிட்டது தெரிந்தது. கின்னஸ் நிறுவன நிர்வாகிகள் முன்னிலையில் சாதனையாளர் பரிதாபமாக பலியானது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

0 Responses to வேதனையில் முடிந்த கின்னஸ் சாதனை முயற்சி : தலை முடியால் ஆற்றை கடக்க முயன்ற இந்தியர் பலி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com