Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கடந்த 25ம் திகதி மரக்காணத்தில் இரு பிரிவினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் கல்வீச்சு, தீவைப்பு, அரசு பேருந்துகள் எரிப்பு போன்ற அசம்பாவிதங்களும் ஏற்பட்டன. இது குறித்து சட்டப்பேரவையில் இன்று கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு  வரப்பட்டது.

விழா நடத்துவதாகக் கூறி பொது மக்களின் அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தியது, சட்டம் ஒழுங்கை சீர்குலைய செய்தது, அரசு பேருந்துகளுக்கு தீ வைத்து நாசமாக்கியது உள்ளிட்ட பல பிரிவுகளின் கீழ் ராமதாஸ் மீது வழக்குப் பதிவு செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

மேலும், இது குறித்து ராமதாசை தலைமையாகக் கொண்டு இயங்கும் பாட்டாளி மக்கள் கட்சியினர் வன்முறையில் ஈடுபட்டால் அவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தமிழக முதல்வர் ஜெயலலிதா சட்டப்பேரவையில் கவனயீர்ப்புத் தீர்மானத்தின் போது, சுமார் அரை மணி நேரம் இது குறித்து விளக்கமாக பேசி எச்சரிக்கை விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 Responses to மரக்காணம் கலவரம் தொடர்பில் ராமதாஸ் மீது வழக்கு : வன்முறை வேண்டாமென ஜெயலலிதா எச்சரிக்கை!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com