Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”


9 வது நாளில்...

பிரான்சில் மே 18 ன் 4வது ஆண்டினை முன்னிட்டு பிரான்சு வாழ் தமிழீழ மக்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் அடையாள கவனயீர்ப்பு  உண்ணா மறுப்புப்போராட்டத்தின் 9 வது நாளில் மூதாளரும் தமிழீழ மக்கள் பேரவை உறுப்பினருமாகிய திரு. நடராசா அவர்கள் தலைமையில் ஈகைச்சுடரினை மாவீரர் குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர் ஏற்றி வைத்து அகவணக்கம் செலுத்தப்பட்டு கசனயீர்ப்புப்போராட்டம் தொடங்கியது.

இன்றைய நாள் பிரான்சில் விடுமுறை நாளானதால் பல நூற்றுக்கணக்கான் தமிழ் மக்கள் வருகை தந்திருந்தனர். குறிப்பாக சேர்ஐp பொன்துவாசு, லாக்கூர்னோவ் வாழ் தமிழ்ச்சங்க மக்கள் அதிகம் கலந்து கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. பல ஆயிரக்கணக்கான வெளிநாட்டு மக்கள் தமிழ் மூதாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பல நூற்றுக்கணக்கான கையெழுத்துக்களை வழங்கியிருந்தனர். சரியாக 6.00 மணிக்கு பழரசசத்துடன் இன்றைய கவனயீர்ப்புப்போராட்டம் நிறைவு கண்டது.

10 வது நாளில்...

பிரான்சில் மே 18 தமிழின அழிப்பு நாள் 4ம் ஆண்டினை முன்னிட்டு கடந்த மே 1ம் திகதி தமிழ்மூதாளர்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் அடையாள கவனயீர்ப்பு போராட்டத்தின் 10 வது நாளாகிய இன்று தமிழ்முதாளர்களில் ஒருவரான திருமதி. லூசியா மேரி அவர்கள் தலைமையில் உண்ணாமறுப்புப்போராட்டம் காலை 10.00 மணிக்கு ஈகைச்சுடரினை ஏற்றி வைத்து ஆரம்பித்து வைத்திருந்தார்.

இன்று காலை காலமாற்றம் கடும் குளிருக்கு மத்தியில் எம்மவர்கள் பலர் கலந்து கொண்டிருந்தனர். விசேடமாக தாய்த்தமிழ்நாட்டில் மாணவர்களால் முன்னெடுக்கப்படும் ஈழத்தமிழ் மக்களுக்கர்ன உண்ணா மறுப்புப்போராட்டத்தில் பங்கு கொண்ட சட்டக்கல்லூரி மாணவன் ஒருவர் இப்போராட்டத்தை அறிந்து அந்த இடத்திற்கு வந்து தனது ஆதரவினை தெரிவித்திருந்தார். இன்றும் வழமைபோல பல வெளிநாட்டவர்கள் வந்து இப்போராட்டத்தை கண்ணுற்றதும் தமது ஆதரவை கையெழுத்திட்டு ஆதரவு தந்திருந்தனர். மாலை 6.00 மணிக்கு குளிர்பாணம் வழங்கி இன்றைய் நாள் நிறைவு கண்டது.

0 Responses to பிரான்சில் மூதாளர்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் அடையாள கவனயீர்ப்பு போராட்டத்தின் 10 வது நாளில்..

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com