Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 44ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு நெதர்லாந்து நாட்டு மக்களுக்களினதும், நெதர்லாந்தைச் சேர்ந்த ஊடகங்களினதும் தமிழர் தாயகத்தில் தொடர்ந்தும் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் இன ஒடுக்குமுறைக்கெதிரான ஆதரவைத்தேடி 14 வைகாசி, செவ்வாய்க்கிழமை காலை 11.30 மணிக்கு அம்ஸ்ரர்டாமைச் சேர்ந்த சூரி அவர்களால் நடைப்பயணம் ஒன்று ஆரம்பிக்கப்பட உத்தேசிக்கப்பட்டு உள்ளது.

இந்நடைப்பயணம் அம்ஸ்ரர்டாமில் ஆரம்பித்து ஹில்வர்சம் மீடியா பார்க் வரை சென்று அங்கு புதன்கிழமை 15ம் திகதி காலை மகஜர் கையளிக்கப்பட்டபின் அங்கிருந்து தொடர்ந்து டென்ஹாக் பாராளுமன்றத்தில் அமைதி நிகழ்வு நடைபெறும் இடத்தை வைகாசி 18ம் திகதி சென்றடையும். இந்நடைப்பயணத்திற்கு வலுவூட்ட விரும்புபவர்கள் வரவேற்கப்படுகிறார்கள்.
இந்நடைப்பயணத்திற்கான பயணப்பாதை வருமாறு……
Damrak (Amsterdam) to mediapark (Hilversum)
Damrak > Diemen > Muiden > Muidenburg > Naarden > Laren > Hilversum.(mediapark)

Mediapark (Hilversum) to binnenhof (Denhaag)
Hilversum > Bussum > Badhovedorp > Hoofddorp > Nieuwvennep > Leimuiden > Leiden > Leidschendam > Voorburg > Denhaag (binnenhof)

மேலதிக தொடர்புகளுக்கு
TP-0684999899, 0640229481
நெதர்லாந்து தமிழர் பேரவை



0 Responses to 12 நாள் சிறைவாசத்திற்கு பின்னர் ராமதாஸ் ஜாமீனில் விடுதலை

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com