பீகார் மாநிலத்தின் கிழக்கு பகுதியில் உள்ள பூர்ணியா மாவட்டத்தில் பேலி எனும் கிராமத்தை சேர்ந்தவர் சுஷ்ரதா. இவரது கணவர் லாரி கிளீனராக உள்ளார். இவர்களுக்கு 4 மற்றும் 5 வயதில் இரண்டு குழந்தைகள் உள்ளனர். தற்போது சுஷ்ரதா 4 மாத கர்ப்பிணியாக உள்ளார்.
நேற்று
முன்தினம் சுஷ்ரதாவின் கணவர் வேலைக்கு சென்று விட்டார். வீட்டில் சுஷ்ரதா
குழந்தைகளுடன் தனியாக இருந்தார். அப்போது அவருக்கு அறிமுகமான ஒரு பெண்
வந்தார். உனக்கு பண உதவி வாங்கி தருகிறேன் என்று கூறி அவர் சுஷ்ரதாவை
அழைத்து சென்றார்.
சந்த்பூர்
என்ற கிராமத்துக்கு சென்றதும் அந்த பெண் சுஷ்ரதாவை ரூ.11 ஆயிரத்துக்கு
அசோக்சிங் என்பவருக்கு விற்றார். உத்திரபிரதேசத்தை சேர்ந்த அசோக்சிங், ரூ.
11 ஆயிரம் கொடுத்துவிட்டு, உடனே அங்குள்ள ஒரு கோவிலில் வைத்து சுஷ்ரதாவை
மிரட்டி தாலி கட்டினார்.
பிறகு
அவர் சுஷ்ரதாவை உத்திர பிரசேத்தில் உள்ள தன் வீட்டுக்கு அழைத்து சென்றார்.
இதுபற்றி பேலி கிராமத்தை சேர்ந்த சமூக நல அமைப்பு நிர்வாகி சில்பிசிங்
என்பவருக்கு தெரியவந்தது. சில்பிசிங் இதுபற்றி உடனடியாக போலீசாருக்கு தகவல்
தெரிவித்தார். அதன் பேரில் போலீசார் அதிரடி வாகன சோதனை நடத்தி சுஷ்ரதாவை
மீட்டனர். அவரை விற்பனை செய்த பெண்ணும், விலைக்கு வாங்கிய அசோக்சிங்கும்
கைது செய்யப்பட்டனர்.
0 Responses to கர்ப்பிணி பெண் 11 ஆயிரத்துக்கு விற்பனை!