Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சிரியாவில் அதிபர் பஷீர் அல் ஆசாத்தின் ஆட்சிக்கு எதிராக பொதுமக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களில் சிலர் ஆயுதப் போராட்டங்களிலும் இறங்கியுள்ளனர். ஆயுதப் போராளிகளை வேட்டையாட பஷீர் அல் ஆசாத், ராணுவத்தை ஏவி விட்டுள்ளார். 

இந்நிலையில், போராளிகளிடம் பிடிபட்ட ராணுவ வீரரின் மார்பை பிளந்து அவரது இதயத்தை வெளியே எடுத்து ஒரு போராளி மென்று தின்னும் வீடியோ காட்சி இணையதளங்களில் உலா வருகிறது. பரூக் படை என்னும் போராளிகள் குழுவின் தலைவனான அபு சக்கார் என்பவன், ராணுவ வீரரின் இதயத்தை மென்ற படியே 'பஷீர் நாயின் கைக்கூலிகளான ராணுவமே.. உங்கள் இதயம் மற்றும் ஈரல்களை தின்று விடுவோம் என்று இறைவன் மீது ஆணையிடுகிறோம்' என்று  வெறித்தனமாக கூச்சலிடும் காட்சி இந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. 

வீடியோவை கண்ட மனித உரிமை அமைப்புகள் மற்றும் அதிபருக்கு ஆதரவான இயக்கங்கள் இந்த காட்டுமிராண்டித் தனமான செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

0 Responses to ராணுவ வீரரின் இதயத்தை மென்று தின்னும் போராளி - பரபரப்பு வீடியோ

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com