சிறிலங்காவில் 13ம் திருத்தச் சட்டம் மற்றும் மாகாண சபை முறை என்பவற்றை இரத்து செய்யும் தனிநபர் பிரேரணை ஒன்றைப் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்வுள்ளதாக
அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற முறைமைக்கு மாறான, 13ம் திருத்தச் சட்டமும் மாகாண சபை முறையும் நீக்கப்பட வேண்டுமெனும் பிரேரணை இந்த வாரம் பாராளுமன்றில் சமர்பிக்கப்படும் என தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், இந்தியாவில் மாநிலம் ஒன்று அதிகாரத்தை மீறி செயற்பட்டால் அம்மாநிலத்தின் அதிகாரத்தை மத்திய அரசு பொறுப்பேற்க முடியும் என்ற வகையில், சமூக நீதி பட்டியல் அதிகாரம் மத்திய அரசுக்கு இருக்கின்றது.
ஆனால் சிறிலங்காவில் அந்த அதிகாரம் மாகாண சபைக்கு இருப்பது மிகவும் அபாயகரமான விடயம் எனவும், 13ம் திருத்தச் சட்ட மூலத்தில் குறிப்பிடப்படும், காணி, பொலிஸ் அதிகாரங்களை மாகாண சபை பயன்படுத்தினால் அது பெரும்பான்மை மக்களுக்கு அநியாயத்தையும் நாட்டின் நிர்வாகத்திற்கு அபாயத்தையும் ஏற்படுத்தும் எனவும் கூறியிருப்பதாகவும் தெரிய வருகிறது
0 Responses to 13ம் திருத்தச் சட்டமும் மாகாண சபையும் நீக்கப்பட வேண்டும் : அமைச்சர் சம்பிக்க பிரேரணை