Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் இந்தியா தோல்வி கண்டுள்ளது. இதனை தான் ஒப்புக்கொள்வதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் அசோக் கே. காந்தா ஒப்புக்கொண்டுள்ளார் என்று , தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகரான அசோக் கே.காந்தா, இந்திய வெளிவிவகார அமைச்சின் கிழக்கு ஆசிய பிரிவுக்கான செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் மிக விரைவில் இலங்கையிலிருந்து செல்லவுள்ளார்.இந்நிலையில், தமிழ்த் தேசிய கூட்டமைப்பினரால் நேற்று திங்கட்கிழமை அசோக் கே. காந்தாவுக்கு விசேட விருந்துபசாரமொன்றை வழங்கினர். அத்துடன், இதன்போது இரு தரப்பினருக்கும் இடையில் விசேட கலந்துரையாடலொன்றும் இடம்பெற்றது.

கொழும்பு கலதாரி ஹோட்டலில் நடைபெற்ற இந்நிகழ்வில் த.தே.கூ.பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா. சம்பந்தன் உட்பட அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.

இதன்போது, உரையாற்றிய த.தே.கூ.பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா. சம்பந்தன், 'இலங்கையின் பழங்குடிகளான தமிழ் மக்களுக்கும் சுய உரிமைகள் உண்டு. அதனால், தமிழ் மக்களுக்கு சுயநிர்ணய உரிமைகள் என்ற அடிப்படையில் தீர்வினைப் பெற்றுக்கொடுக்க இந்தியா ஒத்துழைப்பு வழங்க வேண்டும்' என்று அசோக் கே. காந்தாவிடம் கேட்டுக்கொண்டார்.

இதனையடுத்து தமிழ்த் தேசிய கூட்டமைப்பினருக்கு பதிலளித்த இந்திய உயர்ஸ்தானிகர் அசோக் கே. காந்தா, 'இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு பெற்றுக்கொடுப்பதில் இந்தியா தோல்வி கண்டுள்ளதை நான் ஒப்புக்கொள்கிறேன்' என்று குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையினில் இருந்த வரையிலும் மகிந்த அரசை காப்பாற்றுவதையே தொழிலாக கொண்டு அசோக் கே.காந்தா செயற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

0 Responses to தமிழர் விவகாரத்தினில் இந்தியா தோல்வியாம்! மகிந்த கும்பலது விசுவாசி அசோக் கே. காந்தா!!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com