Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”


இலங்கையில் தமிழருக்கு எதிராக இடம்பெற்ற மாபெரும் இன படுகொலையை நினைவு கூறும் விதமாக, நியூசிலாந்து நாட்டின் தமிழர் ஒருங்கிணைப்பு குழுவினருடன் இணைந்து தமிழ் இளையோர்அமைப்பினரால் ஓக்லாந்து நகரில் 19 திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணியளவில்  Mt Eden war memorial மண்டபத்தில் பொதுச்சுடர்  ஏற்றளுடன்   சிறப்பாக செந்நெருப்பு நாள் நிகழ்ச்சி ஆரம்பமாகியது.


முதலில் நியூசிலாந்து நாட்டின் கொடியினை நியூசிலாந்து தமிழ்சங்க தலைவர் வசந்தன் அவர்கள் ஏற்றிவைத்தார்.

அதனைத் தொடர்ந்து தமிழீழ தேசியக்கொடியினை  நியூசிலாந்து நாட்டின் தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் பொறுப்பாளர் அசோக் அவர்கள் ஏற்றிவைத்தார். ஈகைசுடரினை, இறுதிக்கட்ட போரில் வீரச்சாவை தழுவிய வீரவேங்கை நிரோஜா அவர்களின் சகோதரர்    ஏற்றிவைத்தார்.தொடர்ந்து மக்கள் அனைவரும் பூக்களை  கையில் ஏந்தியவாறு மலர் வணக்கம் செலுத்தினர். இச்செந்நெருப்பு நாளின் முதல் நிகழ்வாக  உணர்ச்சிக் கவிஞர் காசிஆனந்தன் அவர்களின் உரை அடங்கிய ஒரு வீடியோ ஒளிப்படம் காண்பிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து இன படுகொலையை விபரிக்கும் உணர்வுமிக்க உரைகளும் கவிதைகளும் பாடல்களும் இடம்பெற்றன.

அதனை தொடர்ந்து “பிரபாகரன் தமிழர் எழுச்சியின் வடிவம்" என்ற நூலும் இங்கு வெளியிடப்பட்டது.

தொடர்ந்து நியூசிலாந்து நாட்டின் தமிழ் இளையோர் அமைப்பினரால் உருவாக்கப்பட்ட தற்போதைய சூழ்நிலைகளை எடுத்துகாட்டும் வீடியோ ஒளிப்படம் காண்பிக்கப் பட்டது. இந்நிகழ்வில் நுற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு தங்கள் உணர்வுகளை வெளிபடுத்தினர்.இறுதியாக தமிழீழ எழுச்சி பாடல் இசைத்ததை தொடர்ந்து கொடியிறக்கத்துடன் நிகழ்வுகள் யாவும் முடிவுபெற்றன .














0 Responses to நியூசிலாந்து செந்நெருப்பு நாள் - 2013 (படங்கள் இணைப்பு)

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com