ஐ பி எல் சூதாட்ட புகாரில் இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் கைதானதை அடுத்து, அவர் நடித்துவந்த மலையாள படத்தின் கவுரவ வேடத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது.
ஸ்ரீசாந்த் கேரளாவை சேர்ந்தவர். அவர் சூதாட்ட புகாரில் கைதானதை அடுத்து, அம்மாநில அரசின் அரசு விளம்பரங்களில் இருந்து அவர் நடித்து இருந்த காட்சிகள் நீக்கப்பட்டன. இதை அடுத்து, கேரளாவை சேர்ந்த பிரபல கவிஞரும் இசைக்கலைஞருமான கைதபுரம் தாமோதரன் நம்பூதிரி, 'மழை வில்லின் அத்தம் வரே' என்கிற மலையாளப் படத்தை இயக்கி வருகிறார்.இந்த படத்தில் ஸ்ரீசாந்த் நடித்த காட்சிகளை நீக்குவது என்று தாமோதரன் நம்பூதிரி முடிவு செய்து இருக்கிறார்.
இது குறித்து அவர் கூறும்போது, "தனிப்பட்ட முறையில் ஸ்ரீசாந்த் மீது எனக்கு எந்த விரோதமும் இல்லை. நமது நாட்டில் சிறந்த வேகப்பந்து வீச்சாளர் அவர். ஆனால், அவர் மீதான எதிர்மறை விமர்சனங்களை கருத்தில் கொண்டு, அவர் நடித்த காட்சிகளை நீக்க முடிவு செய்து உள்ளேன், இதில் வேறு கருத்து சொல்வதற்கு இடமில்லை." என்று தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானை சேர்ந்த இளம் கிரிக்கெட் வீரர் ஒருவரின் இந்திய பயணம், அவருடைய வாழ்க்கையை புரட்டிப் போடுவதுதான் அந்த சினிமா படத்தின் கதையாகும்.இந்த படத்தில் இந்த அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர், சையது கிர்மானி நடத்தி வந்த கிரிக்கெட் முகாமில் பங்கேற்பது போன்ற காட்சியில் ஸ்ரீசாந்த் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது.
0 Responses to சூதாட்ட புகாரில் கைது எதிரொலி:சினிமா படத்தில் ஸ்ரீசாந்த் நடித்த காட்சிகள் நீக்கம்!