Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பிரிகேடியர் பால்ராஜ் அவர்கள் நினைவு சுமந்து பிரான்சு தமிழர்கலைபண்பாட்டுக்கழகம் நடாத்திவரும், தேசவிடுதலைப்பாடற் சங்கொலி- 2013 விருதிற்கானபோட்டி இன்றுமிகவும் சிறப்பாகபிரான்சின் புறநகர்ப்பகுதியில் ஒன்றானஓன்லிசூபாஎன்னும் இடத்தில்Salle Chanteloup என்னும் மண்டபத்தில் நடைபெற்றிருந்தது.

மாவீரர்திருவுருவப்படத்திற்கு 1995 ல் மணலாற்றில் வீரச்சாவடைந்தவீரவேங்கைலெப். தாக்சாஐpனி அவர்களின் சகோதரர்ஏற்றிவைக்கபிரிகேடியர் பால்ராஜ் அவர்களின் திருவுருவப்படத்திற்கு தமிழர் ஒருங்கிணைப்புக் குழுபரப்புரைப்பொறுப்பாளர்ஏற்றிவைத்துமலர்வணக்கமும் செய்யப்பட்டுஅகவணக்கம் செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்துசங்கொலி 2013ற்கான நடுவர்கள் போட்டியாளர்களுக்கும்,மக்களுக்கும் அறிமுகம் செய்துவைக்கப்பட்டது. கலைபண்பாட்டுக்கழகப் பொறுப்பாளர்அவர்களுக்கானபோட்டியாளர்தெரிவுசெய்யும் பத்திரங்கள் வழங்கப்பட்டது.

போட்டிநிகழ்வில் முதலாவதாகசிறப்புபாடகராகசென்றவருடம் 2012ல் சங்கொலிவிருதினைபெற்றுக்கொண்டசெல்வி. சி. புலியாட்சிஅவர்கள் மாவீரர்புகழ்பாடுவோம் என்கின்றபாடலைப்பாடிதொடக்கிவைத்தார். அதனைத் தொடர்ந்துகீழ்ப்பிரிவு,மத்தியபிரிவு,மேற்பிரிவு, அதிமேற்பிரிவு,அதிஅதிமேற்பிரிவு,சிறப்புப்பிரிவில் கடந்த5ம் திகதிநடைபெற்றதெரிவுப்போட்டியில் தெரிவுசெய்யப்பட 40போட்டியாளர்கள் போட்டியிட்டனர்.

போட்டியிட்ட அத்தனைபோட்டியாளர்களில் கீழ்ப்பிரிவுபிள்ளைகளின் பாடல்களும்,அவர்கள் அதனைமனப்பாடம் செய்து மழலைகுயில்களாக ஒப்புவித்தமையும் மெய்சிலிர்க்கவைத்தது. ஒவ்வொருபிரிவுகளுக்கும் பலத்தபோட்டிகள் இடம்பெற்றன. பலபுதியபுதியபோட்டியாளர்கள் பங்குகொண்டு போட்டியிட்டனர்.

சங்கொலி விருதிற்கான போட்டி அதிமேற்பிரிவிலும், அதிஅதிமேற்பிரிவிற்க்கான போட்டியாளர்களுக்குமிடையேமிகவும் சிறப்பான போட்டியாகவும் இருந்தது.
வாத்தியக்கலைஞர்களுடைய அற்புதமான இசையும் ஒலிக்கட்டமைப்பாளரின் ஒலி ஒழுங்கு படுத்தலும் மிகவும் இனிமையாக போட்டியாளர்களும், பார்வையாளர்களுக்கும், மிகுந்தசந்தோசத்தை ஏற்படுத்தியிருந்தது. இப்போட்டியில் டென்மார்க்கில் இருந்துவந்தபோட்டியாளர்களும் பரிசினைபெற்றிருந்தனர்.

தாயகவிடுதலைப் பாடற் போட்டி சங்கொலிவிருது 2013 போட்டி நிகழ்விலே தமிழர்கலைபண்பாட்டுக் கழகம் சிறப்பானதொரு விடயத்தை செய்திருந்தனர். தாயகத்தின் விடுதலைக்காக புலத்திலே பலகலைஞர்கள் உணர்வாளர் இலைமறைகாய்களாக  இருந்து வந்திருக்கின்றனர். அவர்கள் வாழும் காலத்திலே மதிப்பளிக்கப்படவேண்டும் என்கின்ற உயரியநோக்கத்தில் இந்தஆண்டு ஐவர் மதிப்பளிக்கப்பட்டனர். அவர்கள் எவ்வாறு புலத்தில் தாயகத்தின் விடுதலைக்காகவும், பல்வேறு தடைகள், நெருக்கடிகள்,பழிச்சொல்கள்,மத்தியில் உண்மையின் பக்கம்நின்று சோரம் போகாமல், சுயநலம் பாராது பொதுநலமே தமது செயற்பாடு என்றவாழ்ந்துவரும் இவர்கள் ' விடுதலையின் வேர்கள்'' என்கின்றபட்டத்தை வழங்கி மதிக்களிக்கப்பட்டிருந்தனர்.  இவர்கள் முறையே பிரான்சின் மூத்தகலைஞர்களின் ஒருவரான திரு. சி.தயாநிதி அவர்களும்,நடனஆசிரியர் திருமதி. தனு சாமகேந்திரராசா அவர்களும், மண்டபம் மேடைமற்றும் தாயகவிடுதலைச் செயற்பாடுகளில் தனித்த முத்திரையை பதிக்கும் திரு. பாக்கியநாதன் (பேபி) அவர்களும், பிரான் சுதமிழர் கலைபண்பாட்டுக்கழக வாத்தியக்கலைஞருமாகிய திரு. பவாஅவர்களும்,பிரான்சில் தமிழர்தரப்பில் முன்னனிமுதல் தரஒலிஒளிகட்டுப்பாட்டாளரும் உணர்வாளருமான திரு. சிவா அவர்களும் பிரான்சின் தமிழர்கலைபண்பாட்டுக்கழகத்தின் பொறுப்பாளர் திரு. சுதர்சன் அவர்களால் பொன்னாடைஅணிந்துபட்டயமும் வழங்கி மதிப்பளிக்கப்பட்டனர்.

நிகழ்வில் சிறப்புரைஆற்றிய பரப்புரைப் பொறுப்பாளர் திரு. மேத்தாஅவர்கள் விடுதலையின் வேர்கள் என்கின்ற இந்த உயரிய சிறப்புப்பட்டத்திற்குரிய இவர்கள் யாவரும் இதுவரைகாலமும் எவ்வாறு தாயகவிடுதலையோடு இருந்தார்கள் புலத்திலும், பிரான்சிலும் வாழுகின்ற தமிழ்மக்களும் எமதுவருங்காலசந்திக்கு தமிழனின் உயர்வானகலையை கற்றுக்கொடுத்ததோடுமட்டும்  நின்றுவிடாது தாம் வாழும் நாட்டுமக்களுக்கும், ஒவ்வொருமேடைகளிலும்,நாம் இங்குஏன் வந்தோம், ஏன்வாழ்கின்றோம், நாம் யார் என்பதைகிராமங்கள் முதல் நகரங்கள் எமதுகலையால் நாடகம் மூலமாகவும்,நடனம் மூலமாகவும் வடிவம் கொடுத்து எமது நிலைப்பாட்டை,எமதுதேவையை,எமது எதிர்பார்பை, எமது இனத்தின் பாண்பாட்டை, எடுத்துச்சென்றவர்கள் ,எடுத்துச்சொன்னவர்கள் இவர்கள் என்றும்,அதற்குரியவர்களை உருவாக்கி கலைரீதியாகபரப்புரைசெய்து தமிழ்மக்களின் உயர்வுக்கும்,வாழ்வுக்கும் ஏணிப்படிகளாக இருந்தவர்களில் ஒருசிலர்கள்கள் இந்த தடவை மதிப்பளிக்கப்படுகின்றனர்.

இனிவரும் காலங்களில் விடுதலைக்குஉண்மையின் வழிநின்றும்தடம்பிரளாதுவிடுதலைதேரின் வடம்பிடித்தவர்கள் பலதுறையைசேர்ந்தவர்கள் அவர்கள் வாழும் காலத்தில் மதிப்பளிக்கப்படுவார்கள் என்றும் கூறியிருந்தார். மதிப்பளிப்பில் மூத்தகலைஞரானதிரு. சி. தயாநிதிஅவர்கள் குறிப்பிடுகையில் தாய்மண்ணில் எமது இனம் எமதுமண் எமதுமண்ணின் மைந்தர்கள் செய்ததிலும் அவர்கள் செய்தசாதனைகளில் தாம் செய்திருப்பதுஒருதுளியேநாம் இன்னும் எதையும் மனதிற்குதிருப்தியாகசாதிக்கவில்லைஎன்றாலும்ஓட்டப் பந்தையத்தில் ஓடிக் கொண்டிருக்கின்ற ஒருவனுக்குபலத்தைகொடுப்பதற்காகஊட்டசத்துகொடுப்பதுபோன்று இது அமைகின்றதுஎன்றும்,தான் வரித்துக்கொண்டது ஒரேபோராட்டம்,ஒரேபாதைஎன்றும், இத்தனைவருடகாலம் ஒன்றாக எவ்வாறுக லைஞர்கள் நாம் ஓரணியிலேநின்றோமோ அதேபோலவே எப்போதும் நிற்கவேண்டும் நிற்பேன் என்றும் நாங்கள் ஒருகலைத்தேனீர் கூட்டமாக இருந்தோம் கலைத் தேனைமக்களுக்கு கொடுத்தோம் இன்றும் அந்ததேனீகள் எங்கே என்று கேள்வியாக கேட்டுமக்களின் பலத்தகரகோசத்திற்கு மத்தியில் தெரிவித்திருந்தார்.

ஏனையவர்களும் தமக்கு இப்பட்டமானதுபெரும் சந்தோசத்தையும் பெருமையையும் தருவதோடு மட்டுமல்லாதுதம்மை இன்னும் தொடர்ந்து இனத்திற்காகஉழைக்கஊக்குவிக்கின்றதுஎன்றும் குறிப்பிட்டிருந்தனர்.

அதனைத்தொடர்ந்துகடந்தமாதம் 21ம் நாள் தமிழர்கலைபண்பாட்டுக்கழகத்தினால் நடாத்தப்பட்ட இசைவேள்வி கர்நாடகசங்கீதப்போட்டியில் பங்குபற்றி வெற்றயீட்டியமாணவர்களுக்கான பரிசில்களும்,சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
அதனைத் தொடர்ந்து சங்கொலி 2013ன் போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கான பரிசில்களும்,சான்றிதழ்களும்,நினைவுச்சின்னமும் வழங்கப்பட்டது.
'வன்னிமண்ணிலேமயில் கூத்தாடுமா இல்லைபோராடுமா''என்கின்றபாடலையும் பாடலில்வரும் சுரங்களையும் மிகவும் தந்துரூபமாகபாடி பலத்தகரகோசங்களையும் பாராட்டுதல்களையும் பெற்று அதிஅதிசிறப்புப்பிரிவில் போட்டியிட்ட இராஐலிங்கம் றொசான் அவர்கள் சங்கொலி2013 விருதினை தனதாக்கிக்கொண்டார். பலத்தகரகோசங்கள் அனைவர்தரப்பிலும் பேரொலியாகவந்திருந்தது.

அவருக்கானவிருதினைதமிழர்கலைபண்பாட்டுக்கழகத்தின் பொறுப்பாளர்திரு. நிதர்சன் அவர்கள் வழங்கினார். செல்வன். றெசான் உரையாற்றும் போதுதான் மிகுந்தசிரமமும்,வெல்லவேண்டும் என்கின்றவிடாமுயற்ச்சியும் தனதுதாய் மற்றும் தந்தைதனதுசங்கீதஆசிரியயர்,தமிழ்ச்சோலைநிர்வாகிகள்,தமிழ்ச்சங்கம் பேருதவியாக இருந்தார்கள் என்றும் தனது தாயாரையும்,தந்தையும்,சங்கீத ஆசிரியரையும் மேடைக்கு அழைத்துஅவர்களின் காலில் வீழ்ந்து ஆசீர்வாதம் பெற்றார். அத்துடன் தன்னைக்கலைஞானாகதொடர்ந்துமேடைகள் கொடுத்துதன்னைவெளிக்குகாட்டியதுதமிழர்கலைபண்பாட்டுக்கழகமேஎன்றும் தான் தொடர்ந்துசங்கொலிபோட்டியில் பங்குபற்றமுடியாததொருநிலைஏற்பட்டாலும் தொடர்ந்தும் எனதுகலைபணிதொடரும் என்றும் என்னைப் போலபல குழந்தைகளைஉருவாக்குகின்றபொறுப்புகொடுக்கப்பட்டிருக்கின்றதுஎன்பதைநான் உணருவதோடுஅதனைசெய்வேன் என்றும் கூறியிருந்தார்.

அவருடையஅன்னைஒருசிறந்தபாடகர்என்பதைகடந்த 2012 சங்கொலிபாடற்போட்டியில் போட்டியிட்டுதனதுதிறமையைவெளிகாட்டியிருந்தார். தனதுமனதில் உள்ளதைமகனேமகனேபோய்வாடாமண்ணைமீட்கபோய்வாடாஅன்னைதேசம் அயலார்கையில் இருப்பதுமுறையல்லபோய்வாடாஎன்கின்றபாடலைபாடிபுலத்தில் வாழும் ஒவ்வொருதமிழிச்சியும் வாழவேண்டும், இருக்கவேண்டும் என்பதைஎடுத்துக்காட்டாக நின்றிருந்தார்.

தாயகவிடுதலைப்பாடற் போட்டிசங்கொலி 2013ல் வெற்றிபெற்றவர்களும் பிரிவுகளும் பின்வருமாறு:-
கீழ்ப்பிரிவு :-

1. வது இடத்தை : தெய்வேந்திரம் கரிகரணி
2. வது இடத்தை : சுரேஸ்குமார்சங்கீதன்
3. வது இடத்தை : சிறிரங்கள் கரிணி
மத்தியபிரிவு
1.    வது இடத்தை: கணேசமூர்த்திஅபிநயா
2.    வது இடத்தை : எட்வேட் லூயிஸ் இலக்கியா
3.    வது இடத்தை : சதீஸ் சிறித்திக்
மேற்பிரிவில்
1.வது இடத்தை: எட்வேட்லூயிஸ் அநோஐpனி
2. வது இடத்தை: சோதிராசாசோனா
3 வது இடத்தை : இராசலிங்கம் சுவேதன்
அதிமேற்பிரிவில்
1.    வது இடத்தை : செல்வி.nஐயதாசன் nஐருசா
2.    வது இடத்தை :செல்வி.கோகுலதாஸ் சூரியா
3.    வது இடத்தை : செல்வி.கோகுலதாஸ் வித்தியா
அதிஅதிமேற்பிரிவில்
1.    வது இடத்தை:செல்வன் .செல்வராசாநிருசன்
2.    வது இடத்தை:செல்வி.ஞானசூரியாதுசித்தா
3.    வது இடத்தை: செல்வி.nஐயம் சுகர்னியா
சிறப்புப்பிரிவில்
1.    வது இடத்தை: திரு.நா. செல்வகுமார்
2.    வது இடத்தை: திரு. மை. மரியசீலன்
3.    வது இடத்தை: திரு. ஆ. ஓவிந்தராசா

சங்கொலி 2013 விருதினைசெல்வன். இராலிங்கம் றொசான் அவர்களும் பெற்றிருந்தார்.
போட்டிநிகழ்வின் இறுதியில் நம்புங்கள் தமிழீழம் நாளைபிறக்கும் பாடலுடன் தமிழரின் தாகம் தாரகமந்திரம் சொல்லப்பட்டுநிகழ்வுகள் மாலை 6.00 மணிக்குநிறைவுகண்டன.

0 Responses to பிரான்சில் நடைபெற்றசங்கொலி 2013 விருதிற்கானபோட்டி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com