இந்தியாவை தவிர்த்து வெளிநாடுகளில் வாழும் இந்திய வம்சாவளி பெண்களை மையப்படுத்தி வருடம் தோறும் நடைபெறுகிறது உலகளாவிய மிஸ் இந்தியா போட்டி.
இம்முறை மலேசியாவில் நடைபெற்ற இப்போட்டிகளில் இறுதிப்போட்டியில் பட்டத்தை வென்றார் நெகால். இவர் பிரிட்டனின் லீசெஸ்டர் பகுதியை சேர்ந்தவர். கடந்த அக்டோபர் மாதம் மிஸ் இந்தியா யு.கே பட்டட்தை வென்றார்.
கேட்கும் திறன் இல்லாததால், தங்கை ஜெய்ஷா மூலம் தன் கருத்தை வெளிப்படுத்துகிறார். இந்திய பாரம்பரிய உடை போட்டி, அறிவுத்திறன் மற்றும் வினாடி வினா உள்ளிட்ட போட்டிகளில் சக போட்டியாளர்களுடன் போட்டியிட்டு கடும் சவாலுக்கு மத்தியில் வெற்றி பெற்றிருந்தார்.
இவர் பாலிவூட் நடன இசைக்கு ஏற்ப நடனமாடி பழகியிருப்பதால், இசையை கேட்கும் திறன் இல்லாவிட்டாலும், இசை கருவிகளின் அதிர்வின் மூலம் அழகி போட்டியின் போது நடனமாடி அசத்தினார்.
இப்போட்டியில் இரண்டாம் இடத்தை மலேசிய இந்திய அழகி ஜஸ்வீர் கவுருக்கும் மூன்றாம் இடத்தை ஓமன் நாட்டை சேர்ந்த சுரபி சசிதேவும் பெற்றுக்கொண்டனர்.
0 Responses to 2013 இன் உலகளாவிய மிஸ் இந்தியாவாக செவிப்புலன் அற்ற நேகால் வெற்றி