Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”


கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிரான போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் மீது 300க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதால், அவரது பாஸ்போர்ட் மீண்டும் முடக்கப்பட்டுள்ளதாகத் தெரிய வருகிறது.

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் மின் உற்பத்தியைத் துவக்க உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்ததோடு கூடங்குளம்  அணுமின் நிலையத்துக்கு எதிரான போராட்டக்குழுவினர் மீது உள்ள அத்தனை வழக்குகளையும் திரும்ப பெறவேண்டும்  என்று, தமிழக அரசுக்கும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. எனினும் நேற்று இரவோடு இரவாக நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், உதயகுமார் பாஸ்போர்ட் முடக்கப்பட்டதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்நிலையில், கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அணுசக்தி ஒழுங்கு மாற்று வாரியத்தின் ஆணை கிடைத்தவுடன் மின் உறபத்தி எந்த நேரத்திலும் தொடங்கப்படும் என்றும், மின் உற்பத்தியை எந்நேரமும் தொடங்கும் நிலையிலேயே அணு மின் நிலைய முதலாம் அணு உலை தயாராக உள்ளது என்றும், கூடங்குளம் அணுமின் நிலைய வளாக உயர் அதிகாரி தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது.

0 Responses to கூடங்குளம் அணுமின் நிலைய விவகாரம் : உதயகுமார் பாஸ்போர்ட் மீண்டும் முடக்கம்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com