Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”


குவாத்தமாலாவில் உள்நாட்டு போரில் தனது சொந்த நாட்டு மக்களையே படுகொலை செய்ய உத்தரவிட்ட முன்னாள் ஆட்சியாளர் ஜெனரல் எஃப்ரைன் ரியோஸ் மொண்ட் என்பவருக்கு 80 வருட சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

1980 களில், இவரது தலைமையின் கீழிருந்த அந்நாட்டு இராணுவம், லிக்ஸ்ஸின் மாயா இனக்குழுவை சேர்ந்த 1800 பேரை கொலை செய்துள்ளது. பழங்குடியின் மக்கள் இடதுசாரி கொரில்லாக்களுக்கு உதவியதான சந்தேகத்தின் அவர்களுக்கு தண்டனையாக பரவலான வன்முறைகள், பாலியல் வல்லுறவுகள், பட்டினி போடுதல் ஆகியவற்றை மேற்கொண்டதாக அந்நாட்டு நீதிமன்றம் ஒன்று குற்றம் சாட்டி இதன் கீழ் ரியோஸ் மொண்டுக்கு தண்டனை அறிவித்துள்ளது.

சொந்த நாட்டிலேயே இனப்படுகொலை செய்ததாக தண்டிக்கப்பட்ட முதலாவது முன்னாள் தலைவர் இவராவார். இனி வரும் காலத்தில் ஏராளாமானோர் இவ்வாறு தண்டிக்கப்பட கூடிய சந்தர்ப்பம் உருவாகலாம் என அரசியல் அவதானிகள் கருதுகின்றனர்.

0 Responses to சொந்த நாட்டிலேயே இனப்படுகொலை : குவாத்தமாலா முன்னாள் ஆட்சியாளருக்கு 80 வருட சிறை

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com