திருச்சி மத்திய சிறை சாலையில் இருந்து வெளியில் வந்த பாமக நிறுவனர் ராமதாசுக்கு, நேற்று மாலை திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதை அடுத்து அவர் நேற்று இரவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மரக்காணம் கலவரம் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் தொடர்பாக கடந்த 30ம் திகதி பாமக நிறுவனர் ராமதாஸ் கைது செய்யப்பட்டு, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். நேற்று சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட ராமதாஸ், தாம் உடல் நல குறைவுடன் இருந்தது தெரிந்தும், மேலிட உத்தரவு காரணமாக மிகவும் அலைக்களிக்கப்பட்டதாகவும், சிறையில் இருந்து உயிர் பிழைத்து தப்பித்து வந்ததே பெரும் காரியம் என்றும் உருக்கமாக கூறி இருந்தார்.
இதை அடுத்து நேற்று மாலை, ராமதாஸ் தமது மகன் அன்புமணியை பார்க்க அவரது இல்லத்துக்கு சென்று இருந்த போது, திடீரென அவருக்கு உடல்நலக் குறைவு ஏறப்பட்டுள்ளது. இதை அடுத்து ராமதாஸ் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை மேற்கொண்டு வருகிறார்.
0 Responses to நிபந்தனை ஜாமீனில் ராமதாஸ் விடுதலை | மருத்துவமனையில் அனுமதி!