Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”


தெற்காசியாவில் அதிகரித்து வரும் அணுவாயுத உற்பத்தி மற்றும் ஆயுதச் சமநிலைய|ற்ற தன்மை காரணமாக சமீபத்தில் அமெரிக்க அரசு வாஷிங்டனில் இருந்து இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் அழுத்தம் தெரிவித்துள்ளது.
அதாவது இவ்விரு நாடுகளும் தமக்கிடையே ஆயுதப் போட்டியினை நிறுத்தி அணுவாயுதங்கள் மற்றூம் ஏவுகணைச் செயற்திட்டங்களையும் கட்டுப் படுத்த வேண்டும் என அமெரிக்காவால் கோரிக்கை விடுக்கப் பட்டுள்ளது.

மேலும் இதன் மூலம் இவ்விரு நாடுகளும் அச்சுறுத்தல் இல்லாத (Non-proliferation) ஏனைய நாடுகளின் சமூகத்தோடு ஒன்றி சாதகமான பங்களிப்பினை நல்க முடியும் எனவும் அந்தக் கோரிக்கையில் கேட்கப் பட்டுள்ளது. திங்கட்கிழமை ஜெனிவாவின் அச்சுறுத்தல் அற்ற அணுவாயுத ஒப்பந்தம் குறித்த மாநாட்டில் அமெரிக்காவின் பிரதி மாநிலச் செயலாளர் தோமஸ் கன்ட்ரிமேன் கருத்துரைத்தார். இதன் போது அவர் தென்கிழக்காசியாவில் அதிகரித்து வரும் அணுவாயுத மற்றூம் ஏவுகணை உற்பத்தியினையும் இதன் மூலம் மேற்கொள்ளப் படும் ஆயுத வியாபாரம் குறித்தும் ஏற்பட்டுள்ள அபாயம் குறித்து அமெரிக்கா உன்னிப்பாக அவதானித்து வருகின்றது என்றார்.

இதேவேளை இந்திய பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் இறைமைக்காகவும் பாதுகாப்புக்காகவும் போதுமானவளவு ஆயுதம் உற்பத்தி செய்ய வேண்டிய தேவையைத் தாம் உணர்வதாகவும் இதில் அமெரிக்கா தலையிடாது என்றும் அர்த்தபூர்வமான நம்பிக்கைக்குரிய அணுவாயுத வல்லரசுகளாக அவை திகழ்வதை அமெரிக்கா வரவேற்பதாகவும் கூறிய அவர் இருந்த போதும் தெற்காசியப் பிராந்தியத்தில் ஏனைய நாடுகள் பாதுகாப்பின்மையையும் அழுத்தத்தையும் எதிர் நோக்குமிடத்து அமெரிக்கா அவற்றைக் கையாள்வதற்கு அரசியலில் ஈடுபடும் என்றும் தெரிவித்தார். மேலும் பாகிஸ்தானின் அணுவாயுதங்கள் எந்நேரமும் தீவிரவாதிகளின் கைக்கு சிக்கும் அபாயம் உள்ளது எனவும் அமெரிக்கா கவலை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

0 Responses to இந்தியாவும் பாகிஸ்தானும் அணுவாயுத ஏவுகணைப் பரிசோதனைகளைக் கட்டுப்படுத்த வேண்டும் : அமெரிக்கா அழுத்தம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com