இலங்கையில் நடைபெறும் கொமன்வெல்த் மாநாட்டில்
பிரிட்டிஷ் ராணியார் பங்கேற்க மாட்டார் என்பது வரவேற்கத்தக்கது என்று
திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கை வருமாறு...
இலங்கை, போர்க் குற்றம் புரிந்த நாடு என்பது ஐ.நாவின் அறிக்கை. இலங்கை அதிபர் ராஜபக்சவின் போர்க் குற்றம், மனித உரிமை மீறல் பற்றி, ஐ.நா.வின் மனித உரிமை ஆணையம் ஜெனிவாவில் கூடிய அதன் கூட்டத்தில் இரண்டாம் முறையாக ஒரு தீர்மானத்தையும் நிறைவேற்றியுள்ளது.
முதற் கூட்டத்தில் நடுநிலை வகித்த 47 நாடுகள், இந்த முறை இலங்கைக்கு எதிராகவே அதன் வன்மைகளை உணர்ந்து தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளன.
இந்த நிலையில், வரும் நவம்பரில் (2013) நடைபெறவிருக்கும் கொமன்வெல்த் மாநாடு, இலங்கையில் நடைபெறுவது கூடாது என்ற குரல் உலகின் பல பாகங்களிலிருந்தும் கிளம்பியது.
கொமன்வெல்த் அமைப்பில் 54 நாடுகள் உறுப்பினராக உள்ளன.
இதில் பெரும்பாலானாவை முன்பு பிரிட்டனின் ஆதிக்கத்தின் கீழ் இருந்த நாடுகளாகும். இலங்கையில் கொமன்வெல்த் மாநாடு நடத்தப்படக்கூடாது.
ஜனநாயகத்திற்கு விரோத, மனித உரிமைகளை மீறிய போர்க் குற்றங்கள் புரிந்த அந்நாட்டில் இந்த மாநாடு நடத்தப்படுவது முறையல்ல என்று அவுஸ்திரேலியா, கனடா போன்ற நாடுகளும், இந்தியாவில் உள்ள பெரும்பாலானோரும் வற்புறுத்தினர்.
டெசோ அமைப்பின் சார்பாக பற்பல நாட்டுத் தூதுவர்களைச் சந்தித்தும்கூட வற்புறுத்தப்பட்டது.
இந்த விவகாரத்தில் வழமைபோல மத்திய அரசு வாய்மூடி மௌனியாகவே இலங்கையை இன்னமும் நட்புறவு நாடு என்று கூறுவது, சிறிதும் ஈவு இரக்கமின்றி, தமிழர்களுக்குச் சவால் விடுவதைப் போல் இருக்கிறது!
எப்படியோ, கொமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்திட வேண்டும் என்று அவ்வமைப்பின் பெரும்பாலான நாடுகள் முடிவு செய்து விட்டன என்பது நமது வேதனைக்குரியதாகும்!
உலக அரங்கில், தமிழினப் படுகொலை செய்த ராஜபக்ச அரசு ஏதோ பெரிய சாதனையாளர்களைப் போல கொமன்வெல்த் மாநாட்டை நடத்துவது அந்த நாடுகளுக்கே அவலமான அவமானமாகும்.
என்றாலும், இதை உணர்ந்துதான் போலும், 87 வயதான முதிர்ந்த பிரிட்டிஷ் ராணி இரண்டாம் எலிசபெத் அம்மையார் அதில் பங்கேற்கமாட்டார். அவருக்குப் பதிலாக இளவரசர் சார்ள்சை அனுப்பி வைக்க இருக்கிறார் என்று வந்துள்ள செய்தி, மனித உரிமை ஆர்வலர்களுக்கு சற்று ஆறுதல் தருகிறது!
1973ம் ஆண்டுக்குப் பின், கொமன்வெல்த் நாடுகளின் தலைவர் பிரிட்டிஷ் ராணியார் கலந்து கொள்ளாமல், பங்கேற்காமல் அதன் மாநாடு நடைபெறுவது இதுவே முதல் முறையாகும்!
ராஜரீக ரீதியில் வேறு காரணங்கள் சொல்லப்பட்டாலும், உண்மை உலகத்திற்குத் தெரியாமலா போகும்? எனவே, ராணியாரின் இந்த முடிவு வரவேற்கத்தக்க ஒன்றாகும்' இவ்வாறு வீரமணி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

0 Responses to கொமன்வெல்த் மாநாட்டை பிரிட்டிஷ் ராணி புறக்கணித்திருப்பது இலங்கையின் முகத்தில் கரி: கி.வீரமணி