Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”


லங்கையில் நடந்த இன அழிப்பின் காரணமாக இலங்கைக்கு தமிழக மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இலங்கையை கண்டித்து தமிழ் சினிமாவின் சார்பில் உண்ணாவிரதப் போராட்டங்கள் நடந்தன. 

அதைத்தொடர்ந்து தமிழகத்திற்கு வருகை தந்த புத்த பிக்குகள் அடித்து விரட்டப்பட்டனர். மேலும் தற்போது நடந்து கொண்டிருக்கும் ஐ.பி.எல் T20 தொடரில் சென்னையில் நடக்கும் போட்டிகளில் இலங்கை வீரர்கள் பங்கேற்கக் கூடாது எனவும் போராட்டங்கள் நடைபெற்று இலங்கை மீதான எதிர்ப்பை வலுவாக காட்டியுள்ளனர் தமிழக மக்கள். 

இதைத் தொடர்ந்து இலங்கையில் இருக்கும் ‘இராவண சக்தி’ என்ற அமைப்பினர் ”சிங்களர்களால் தமிழகத்திற்குள் நுழைய முடியவில்லை. புத்த பிக்குகள் அடித்துவிரட்டப்படுகின்றனர். கிரிக்கெட் வீரர்கள் குறிப்பிட்ட போட்டிகளில் விளையாட முடியவில்லை. மேலும் தமிழ் சினிமா நடிகர்கள் எங்களுக்கு எதிராக உண்ணாவிரத போராட்டம் இருக்கிறார்கள். இனி தமிழ் சினிமாவின் முன்னணி திரைப்பட கதாநாயகர்களான ரஜினி, கமல், விஜய் உள்ளிட்டவர்களின் திரைப்படங்களை இலங்கையில் திரையிட விடமாட்டோம். எங்களை மீறி தமிழ்த் திரைப்படங்களை திரையிடும் தியேட்டர்களின் முன்பு போராட்டத்தில் ஈடுபடுவோம்” என்று கூறியுள்ளனர். 

ஆனால் இவர்கள் பேச்சை இலங்கையின் எந்த அரசியல் பிரமுகரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லையாம். கூகிளில் தேடினால் கூட கண்டுபிடிக்கமுடியாத ஒரு அமைப்பு சொல்வதால் இலங்கையில் தமிழ் சினிமாவின் திரையிடலை எந்த விதத்திலும் தடுக்கமுடியாது  என்கிறார்களாம்.

0 Responses to தமிழ் சினிமாவை புறக்கணிக்க நினைக்கும் இலங்கையின் ‘இராவண சக்தி’!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com